tamilnadu

img

தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு 3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தலித் மக்கள்

தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு 3 ஆவது நாளாக காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தலித் மக்கள்

மயிலாடுதுறை, செப். 25-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகிலுள்ள கேசவன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள், குடியிருக்க இடம் கேட்டு 3 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கேசவன்பாளையம் என்கிற கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுனாமிக்குப் பிறகு கட்டித்தரப்பட்ட சின்னஞ்சிறு குடியிருப்புகளில் இரண்டு, மூன்று குடும்பங்களாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இடநெருக்கடியோடு வசிக்கும் நிலையில், குடியிருக்க இடம் கேட்டு கோரிக்கை விடுத்து ஏமாற்றமடைந்த 95-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தித்தினர், 15 தினங்களுக்கு முன்பு தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசைகளை அமைத்து குடியேறினர்.  இந்நிலையில், கடந்த செவ்வாய்யன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து திசை திருப்பி விட்டு, தரங்கம்பாடி வட்டாச்சியர் சதீஷ், காவல் துறை பாதுகாப்புடன்  வருவாய் துறையினரை வைத்து, ஒட்டு மொத்த குடிசைகளையும் பிய்த்தறிந்து கீற்று, மரங்கள், வீடுகளிலிருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை வாகனங்களில் ஏற்றி சென்றார்.  தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள், கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், சீர்காழி  கோட்டாட்சியர் சுரேஷ், பேச்சுவார்த்தை நடத்தி குடிமனை பிரித்து தருவதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிட வலியுறுத்தியதை ஏற்க மறுத்த தலித் மக்கள் இடத்தை பிரித்து தரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் எனக்கூறி கடந்த 3  நாட்களாக கேசவன்பாளையம் கிராமத்தில்(நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.