வெனிசுலா ஜனாதிபதியை பாதுகாக்கும் போரில் உயிர்த் தியாகம் 32 வீரர்களின் உடல்களுக்கு கியூப அரசு ராணுவ மரியாதை!
அமெரிக்கத் தாக்குதலின் போது, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பாதுகாக்கும் பணியில் வீரமரணம் அடைந்த கியூபாவைச் சேர்ந்த 32 போர் வீரர்களின் உடல்கள் கியூபாவிற்குக் கொண்டு வரப்பட்டன. கியூபாவின் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சகத் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்களுக்கு, கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று கியூப மக்கள் அஞ்சலி செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இராணுவ ஜெனரலுமான ரவுல் காஸ்ட்ரோ ரூஸ் (Raul Castro Ruz) மற்றும் கியூபா ஜனாதிபதி மிகுவேல் தியாஸ்-கானெல் (Diaz-Canel) ஆகியோர் வீரர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர்.
