tamilnadu

img

முற்போக்கு சிந்தனையாளர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்க முன்னோடி தோழர் செ. நடேசன் மறைவு

சென்னை,செப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த மார்க்சியவாதியும், முற்போக்கு எழுத்தாளருமான தோழர் செ. நடேசன் உடல்நலக்குறைவின் காரணமாக செப்டம்பர் 17 அன்று உயிரிழந்தார் என்ற  செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனை யையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயற்குழு தனது  ஆழ்ந்த இரங்கலையும், செவ்வணக்க த்தையும் செலுத்துகிறது. தோழர் செ. நடேசன் 1964 இல் ஆசிரி யர் பணியில் சேர்ந்து இடதுசாரி சிந்தனை யால் ஈர்க்கப்பட்டவர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கம் உரு வாக்கப்பட்ட போது ஒன்றுபட்ட கோவை மாவட்ட பொருளாளர், பெரியார் மாவட்ட  செயலாளர், மாநில பொதுச் செயலாளர், அகில இந்திய  செயலாளர் என பல பொறுப்புகளில் ஆசிரியர்களின் நலன்களுக்காகவும், அரசுப் பள்ளிகளை பாதுகாக்கவும் பல கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். குறிப்பாக, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவும், ஒன்றிய அரசுக்கு இணை யான ஊதியம் பெறவும், ஜேக்டி அமை ப்பை உருவாக்கி சிறை நிரப்பு போராட்டம்,  முற்றுகைப் போராட்டத்தை முன்னின்று நடத்தி சிறை தண்டனையும் அனு பவித்தவர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தை ஒரு பலம்பொருந்திய அமைப்பாக உருவாக்கியதில் தோழர் செ. நடேசனின் பங்கும் முக்கியமானதாகும்.

புதிய ஆசிரியன் என்ற மாத இதழை துவக்கி ஆசிரியர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற  பிறகு இடதுசாரி, மார்க்சிய கருத்துக் களோடு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிச கருத்துக்களை தொடர்ந்து எழுதி யும், பரப்புரை செய்தும் வந்தார். அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதி ராக “கல்வியின் மீதான மதவெறி தாக்கு தல்களை எதிர்த்து போராடி எழுக” என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. தீக்கதிரிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியும், மொழி பெயர்ப்பும் செய்து வந்தார். தமுஎகச  திருப்பூர் மாவட்ட துணைத் தலைவராக வும், ஊத்துக்குளியில் கட்சி பணிகளிலும் ஈடுபட்டவர்.  திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி புத்தக திருவிழாவிற்கு முக்கிய பங்கு வகித்தவர். தன்னுடைய வீட்டில் ஏராள மான நூல்களை கொண்ட பெரிய நூல்  நிலையத்தை அமைத்ததோடு, தனது சொந்த ஊரில் மறைந்த தனது மகன்  விஜயானந்த் பெயரில் பெரிய நூலகம் உருவாக்கவும் எண்ணி செயல்பட்டுக் கொண்டிருந்தார் அது நிறைவேறு வதற்குள் நம்மை விட்டு பிரிந்து விட்டார். சிறந்த போராளி, எழுத்தாளர், பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர், தொழிற்சங்கவாதி என பன்முகத் திறன் வாய்ந்த தோழர் செ. நடேசன் அவர்களின் மறைவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கத்திற்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். தோழர் செ. நடேசன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன் ந. சரவணன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்களுக் கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத் தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;