tamilnadu

img

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே மதுக் கடையை மூடக் கோரி சிபிஎம் போராட்டம்

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே மதுக் கடையை மூடக் கோரி சிபிஎம் போராட்டம்

புதுக்கோட்டை, ஆக 1-  பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே, சிபிஎம், பொதுமக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, குமார், மதியரசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கட்டையாண்டிபட்டி பழனியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி. ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சரவணன், சிஐடியு சாத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  மது கடை வேண்டாம் என பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவியர், குடியிருப்பு பொதுமக்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட மனுவை மாவட்டச் செயலாளர் சங்கர், வட்டாட்சியர் சாந்தாவிடம் வழங்கினார். பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை மூடும் வரை மக்களைத் திரட்டி சிபிஎம் தொடர் போராட்டங்களை நடத்தும் என தெரிவி்கப்பட்டுள்ளது.