tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏப்ரல் 14 அன்று சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அவரது சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.