சென்னை,டிச.9- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு ள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந் திருக்கிறார்கள் எனும் செய்தி அதிர்ச்சி யையும், வேதனையையும் தருகிறது. இந்த விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அனைத்து ராணுவ வீரர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. மேலும் அவர் களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத் தினருக்கு ஆறுதலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.