இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன் தலைமையில், திருவெறும்பூர் எலைட் காலனி, பாரதிபுரம் பகுதி பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருவெறும்பூர் எலைட்காலனி, பாரதிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து வருகின்றோம் எங்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தனர்.