tamilnadu

img

பேரூராட்சி சாலையை, நெடுஞ்சாலை துறை சாலையாக மாற்ற சிபிஎம் கோரிக்கை

பேரூராட்சி சாலையை,  நெடுஞ்சாலை துறை  சாலையாக மாற்ற சிபிஎம் கோரிக்கை

சிதம்பரம், ஜூலை 21- சிதம்பரம் நெடுஞ்சாலை துறை அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் சார்பில்  ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமை யில் நெடுஞ்சாலை துறை  உட்கோட்ட பொறி யாளர் முரளிதரனை சந்தித்து  மனு ஒன்று அளித்தனர். அதில் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கிள்ளை முதல் வெள்ளாற்று பாலம் வரையி லும், பொன்னந்திட்டு முதல் முடசல் ஓடை வரையிலும், கிள்ளை முதல் முழுக்கு துறை வழியாக எம்.ஜி.ஆர் திட்டு வரை  உள்ள சாலைகளை பராமரிப்பதிலும், புதிய சாலை கள் போடும் போது பெரும் தொகை செலவு ஆகிறது. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பேரூராட்சியில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை  ஏற்படுகிறது.  எனவே இந்த சாலைகளை  நெடுஞ்சாலை துறையில்  இணைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த சாலைகள் வழியாக பேருந்து போக்கு வரத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட உட்கோட்ட பொறியாளர்  இதுகுறித்து மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்வதாக உறுதி யளித்துள்ளார். இந்நிகழ்வில்   கட்சியின் மூத்த உறுப்பினர்  பி. கற்பனைச் செல்வம், எல்.ஜீவா , ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே. திரு ஞானம் ,நேதாஜி, வினோபா, உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.