நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவில் தீட்சிதர்கள் செயலுக்கு சிபிஎம் கண்டனம்
சிதம்பரம், ஜூலை 1- சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவில் தீட்சிதர் அல்லாதோர் தீபா ராதனை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சி தர்கள் சாமி சிலையை திரை வைத்து மறைத்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழா வில் கருவறையிலிருந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் தேருக்கு எடுத்து வரப்பட்டன. அப்போது தமிழ் ஆர்வலர் பாலசுப்பிரமணியன் காவல்துறையினர் பாது காப்புடன் தீபாராதனை காட்டி பூ தூவினார். இதைத் தொடர்ந்து சாமி சிலைகளை தூக்கி வந்த தீட்சிதர்கள், பாலசுப்பிரமணியன் காட்டும் தீபாராதனை தெரியக்கூடாது என்றும், அவர் போடும் பூக்கள் சாமி சிலை மீது விழுந்தால் தீட்டாகிவிடும் என்றும் கூறி பெரிய துணியைக் கொண்டு திரை வைத்து சாமி சிலை களை மறைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்க ளுக்கு சாமி சரியாகத் தெரியாததால் முகசுலிப்பு ஏற்பட்டது. இந்த கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா,“இறை வழிபாடு என்பது கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஒன்றுதான் என்றும், தீபாராதனை காட்டி பூ போடும்போது திரை வைத்து சாமி சிலைகளை மறைத்தது கண்டிக்கத் தக்கது என்றும் தெரி வித்துள்ளார். சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.