tamilnadu

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சரி செய்ய கோரி திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் சாலை மறியல்

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சரி செய்ய கோரி  திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, ஆக. 18-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் விட்டுக்கட்டி மற்றும் வரம்பியம் கிளைகளின் சார்பாக பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சரி செய்யக் கோரி, திருத்துறைப்பூண்டி வேளூர் பாலம் அருகே, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், சி.வீரசேகரன், வி.வி.செந்தில்குமார், கே.வேணுகோபால், கிளை செயலாளர்கள் ஆர்.சரவணன், வி.முருகேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் களனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி, திருத்துறைப்பூண்டி சரக வருவாய் அலுவலர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.