tamilnadu

அண்ணா பல்கலை. விடுதி மாணவர்கள் 763 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை,டிச.9- அண்ணா பல்கலைக்கழக விடுதி  மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விடுதி  மாணவர்கள் தங்கி இருந்த பகுதி மற்றும்  வளாகங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப் ்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். இதையடுத்து அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கி படிக்கும் 763 விடுதி மாணவர்களுக்கும் பரி சோதனை செய்யப்படுகிறது. அவர்களுடைய ரத்த மாதிரிகள் மரபணு சோதனைக்குட்படுத்தப்படும். விடுதியில் மாணவர்கள் கூட்டமாக உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் உணவு அருந்தும் நேரத்தை அதி கரிக்க ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்து பள்ளி, கல்லூரி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலொசனை நடத்தப்படுகிறது. தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் கல்வி வளாகங்களில் உணவு, விளை யாட்டு மற்றும் வகுப்புகளுக்கு ஒன்றாக  செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.