விவசாயிகள் சங்க செயலாளர் மீது தொடர் தாக்குதல்
கிருஷ்ணகிரி, அக்.22- தேன்கனிக்கோட்டை நெல்லுகுந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க கெல மங்கலம் ஒன்றிய செயலாளர் உத்தரகுமார் மீது நில அபகரிப்பு கும்பல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. 1963 முதல் 75 ஆண்டுகளாக கொத்தடி மைகளாக விவசாயம் செய்த உத்தரகுமார் உள்ளிட்டவர்களுக்கு 2008ல் 5.53 ஏக்கர் நிலம் (சர்வே எண் 259/2A) சுத்தகிரையம் செய்து கொடுக்கப்பட்டது. சட்டப்படியான பட்டா சிட்டா அனைத்தும் உள்ளன. ஆனால் 2013ல் அதே நிலம் வேறு சிலருக்கு போலியாக விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2013 முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நில அப கரிப்பு முயற்சியைத் தடுக்க முற்பட்ட உத்தர குமார் உள்ளிட்டவர்கள் மீது இதுவரை 24 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்ட பிறகும் காவல்துறையினரும், வருவாய் துறையினரும், வட்டாட்சியரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 16.10.2025 அன்று சித்தேகவுடு, மகாதேவையா, சதாசிவையா ஆகியோரின் தூண்டுதலில் அழகேசன், அய்யனார், வைத்தியலிங்கம், லோகேஷ், ரவி, ராமு ஆகியோர் உத்தரகுமார், நவீன்குமார், பிரவீன்குமார், வஜ்ரவேல், மல்லப்பா ஆகியோர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சிபிஎம் மற்றும் விவசாயிகள் சங்கம் தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் கண்ட னம் தெரிவித்துள்ளனர். 23.10.2025 அன்று தேன்கனிக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
