தோழர் ஆர்.ஜவஹர் குடும்பத்திற்கு ஆறுதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், மாநிலக்குழு அலுவலக முன்னாள் செயலாளருமான தோழர் ஜவஹர் காலமானதையொட்டி, புதனன்று கோவில்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே. பி. ஆறுமுகம், கோவில் பட்டி நகர செயலாளர் கே.சீனிவாசன் எம்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.