tamilnadu

img

கருவேல மரங்களை வெட்டி விற்று தீக்கதிர் சந்தா வழங்கிய தோழர்கள்

மயிலாடுதுறை, டிச.7 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியை அடுத்துள்ள ஆணைக்கோயில் கிரா மத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்பகுதியில் சாலையோரங்க ளில் மண்டிக் கிடந்த கருவேல மரங்களை வெட்டி விற்று அதில் கிடைத்த தொகையினை தீக்கதிர் நாளிதழுக்கு சந்தாவாக செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயி லாடுதுறை மாவட்டக் குழு உறுப்பினர் அம்மையப்பன் தலைமையில் கிளைச் செயலாளர் எம்.சம்பந்தம், ஞானசேகர், வேலாயுதம், ராமச்சந்திரன், கிருஷ்ணராஜா, கிருஷ்ணமூர்த்தி, காரல்மார்க்ஸ், குணாளன், சிறுவர்கள் ஸ்ரீகாந்த், சுர்ஜித், தனுஷ் ஆகியோர் ஆணைக்கோயில் பகுதியில் சாலையோரங்களில் மக்களுக்கு இடை யூறாக மண்டிக் கிடந்த கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை விற்று, அதில் கிடைத்த தொகை யினை தீக்கதிர் நாளிதழை கட்சிக் கிளைக்கு வாங்குவதற்காக, 3 ஆண்டு சந்தாக்களை கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இதுபோல் மக்களுக்கு இடை யூறாக இருக்கும் கருவேல மரங்களை வெட்டி விற்று தீக்கதிர் சந்தா பணம் செலுத்துவது எனவும் முடிவும் செய்துள்ளனர். தற்போது “கருவேல காடும் அழிக்கப் பட்டுவிட்டது. சந்தாவுக்கான பணத்தையும் ஒப்படைத்துவிட்டோம்” என்று பெருமையு டன் கூறிய அந்த தோழர்களை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டினர்.