tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்தானம், கண்தானம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்தானம், கண்தானம்

 

இராமநாதபுரம், செப்.14 இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வெள்ளி யன்று அகில இந்திய பொதுச்  செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முத லாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உடல் தானம், கண்தானம் வழங் கப்பட்டது. துவக்க நிகழ்ச்சி மாவட்டக் குழு உறுப்பினர்  ஏ.ஆரோக்கிய நிர்மலா தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் ஜி.பவுல்ராஜ், டி.ராமச்சந்திரபாபு, மாவட் டக் குழு உறுப்பினர்கள் கே. சுமதி, இ.ஜஸ்டின் ஆகி யோர் பேசினர். நிறைவாக தாலுகா செயலாளர் ஜி.சிவா  அஞ்சலி செலுத்தி உரை யாற்றினார். இதில்  தாலு காகுழு உறுப்பினர்கள் ஏ. அசோக், கே.மணிகண்டன், ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், டி. மாரிமுத்து, வி.பழனிகுமார், கே.கார்த்திக், என்.மாரி, கே.தியாகு, வாலிபர் சங்க  தாலுகா குழு செயலாளர்  வழக்கறிஞர் க.கலைச்செல் வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிக்கலில் கடலாடி கிழக்கு தாலுகா குழு சார்  பில் தாலுகா குழு உறுப்பி னர் பச்சமால் தலைமையில் நடைபெற்றது. தாலுகா குழு  உறுப்பினர்கள் நம்புராஜன், ஜெயக்குமார் வாலிபர் சங்க தாலுகாச் செயலாளர் அபுபக்கர் சித்திக், தலைவர் பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளிகள் தாலு காச் செயலாளர் முகமது சுல்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடலாடி கிழக்கு தாலுகா குழு செயலாளர் ராமசாமி உடல் தானம்  செய்தார். இராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் எஸ்.பி.பூமி நாதன் தலைமையில் நடை பெற்றது. தாலுகாச் செய லாளர் என்.வெங்கடேஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராஜ்குமார், நா. கலையரசன் உள்ளிட்டோர் பேசினர். பி.கல்யாண சுந்த ரம், எம்.மலைராஜ், வி. பாஸ்கரன், இரா.அழ கேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  எஸ்.பி.பூமிநாதன், பி. பூமாதேவி, பி.கல்யாண சுந்தரம், உ.அழகு ராமசாமி, இரா.அழகேந்திரன், ஏ. சரஸ்வதி, பி.குருசேவ், எம். மலைராஜ், எம்.முத்துகுமார் ஆகியோர் உடல்தானம் செய்தனர்.