தஞ்சாவூரில் தோழர் பி.ராமமூர்த்தி பிறந்த நாள் விழா
தஞ்சாவூர், செப். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவலகத்தில், தோழர் பி. ராமமூர்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட பி.ராமமூர்த்தி உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.சுரேஷ்குமார், என்.சரவணன், கே.அபிமன்னன், மாநகரக் குழு உறுப்பினர் வீ.கரிகாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
