tamilnadu

img

சமரசமற்ற வர்க்கப் போராளியாக திகழ்ந்தவர் தோழர் என்.வெங்கடாசலம்

தஞ்சாவூர், செப்.22 -  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே இராயமுண்டான்பட்டியில், மகத்தான மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம், தியாகி என்.வி. நினைவுத்திடலில் புதனன்று மாலை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கிளைச் செயலாளர்கள் கே.ரமணி, ஆர்.மனோஜ், வி.சந்தோஷ் தலைமை வகித்தனர். பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், தஞ்சை ஒன்றியச் செய லாளர் கே.அபிமன்னன், திருவையாறு ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா, பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், தஞ்சை மாந கரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.வியாகுலதாஸ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசிய தாவது, 

மகத்தான மக்கள் தலைவர் என்.வி.,யின் நினைவு தினம் இன்று 45 ஆவது ஆண்டாக நடந்து கொண்டுள்ளது. இன்னும் 450 ஆண்டுகள் கடந்தாலும், இதே இடத்தில் நினைவேந்தல் கூட்டம் நடக்கும். இது, சிறந்த கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்த தலைவனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்.  இப்படிப்பட்ட மகத்தான வாழ்க்கை கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. இருக்கும் பொழுது, போற்றிப் புகழப்பட்ட தலைவர்கள், இறந்தபின் மறந்து விடக் கூடிய இந்த உலகத்திலே, மக்களால் என்றென்றும் கொண்டாடப்படக் கூடிய தலைவராக என்.வி. திகழ்கிறார். தோழர் என்.வி.,யைப் போல் ஒவ்வொரு வரும் வாழவேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  சாதி கடந்த சிந்தனை உடையவராக இருந்தார். அவருடைய வாழ்வில் 4 முக்கிய அம்சங்களுக்காக ஒவ்வொரு நொடியையும் செலவிட்டார். 

ஒன்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்க ளின் உரிமைக்காக, அவர்களின் விடுதலைக் காக செயல்பட்டார். அடுத்து, நிலமற்ற மக்க ளின் நில உரிமைக்காக களமாடி இருக்கிறார். மூன்றாவது இரண்டு கோரிக்கைகளை நிறை வேற்ற காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். நான்காவதாக சாதி கடந்த  சிந்தனை உடையவராக, சாதி ஒழிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். சாதிக்கொடுமை க்கு எதிராக செங்கொடி இயக்கம் என்றெ ன்றும் போராடும்”.  இவ்வாறு அவர் பேசினார்.  நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.நடராஜன் (திருச்சி), ஆர். மனோகரன், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.பக்கிரி சாமி, என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார், கே.அருளரசன், என்.சிவகுரு, ஆர்.கலைச் செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவக்குமார், என்.குருசாமி, இ.வசந்தி,  துரை. ஏசுராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோலை. ரமேஷ், எல்.ராஜாங்கம், கே.தமிழர சன், பி.சித்திரவேல், என்.வசந்தா, கே.ராஜ கோபால், எஸ்.விஜயகுமார், டி.தமிழ்ச் செல்வன், என்.பி. வினோத், எம்.ஜி.சரவணன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, தியாகி என்.வி நினை விடத்தில் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

கொடியேற்று நிகழ்ச்சி 

தியாகி என்.வி.நினைவு தினத்தையொட்டி, சுரக்குடிப்பட்டியில் கே.முனியாண்டி, புதுத்தெருவில் நம்பிராஜன் ஆகியோர் கட்சிக் கொடியேற்றி வைத்தனர்.