தோழர் தனலட்சுமி அம்மாள் காலமானார்
திருவாரூர், ஆக.13 - சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலக ஊழியர் தோழர் எஸ்.சம்பத். இவரது தாயார் எஸ்.தனலட்சுமியம்மாள், திருவாரூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள காமராசர் திருமண மண்டப தெருவில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக செவ்வா யன்று காலமானார். அவருக்கு வயது 80. தோழர் எஸ்.தனலட்சுமி அம்மாள் கால மான செய்தி அறிந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், திருவா ரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் தனலட்சுமியம்மாள் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பா.கோமதி, திரு வாரூர் நகரச் செயலாளர் எம்.டி.கேசவ ராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்த ரய்யா மற்றும் மூத்த தோழர்கள் எஸ். கிருஷ்ணன், எஸ்.சேகர், என்.இடும்பையன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.