tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு ஓவியப் போட்டி

திருநெல்வேலி, ஜூலை 8- தோழர் நல்லசிவன் போன்ற வர்களின் பணிகளை  மக்களிடையே  கொண்டு சென்று அவர்களை உணர்வு பூர்வமாக எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டியது  மூத்த மற்றும் இளம் கலை இலக்கியவாதிகளின் கடமை என்றார் ஓவியர் சந்துரு.  தோழர் ஏ. நல்லசிவன் நூற்றாண்டு  நிறைவு விழாவின் சிறப்பு நிகழ்வாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலு வலகத்தில் “தூரிகையில் தோழர் நல்ல சிவன்” என்ற பொருளில் ஓவியம் வரை யும் நிகழ்வு சனிக்கிழமை  நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர்  க.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர் கற்  பகம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மோகன், எம்.சுடலை ராஜ், துரைராஜ், மாவட்டக் குழு உறுப்  பினர்கள் கு.பழனி, துரை.நாராய ணன், எழுத்தாளர் இரா.நாறும்பு நாதன், ஓவியர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவரும் ஓவியருமான ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.  ஓவியம் தீட்டும் நிகழ்வை ஓவியர் சந்துரு, தோழர் நல்லசிவன் படத்தை வரைந்து துவக்கி வைத்தார். தொட ர்ந்து அவர் பேசுகையில், “ சினிமா  நாயகர்களே நம்முடைய புரட்சியா ளர்களாக உலா வரும் இன்றைய சூழலில் நாட்டின் சுதந்திரத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காகப் போராடிய தோழர் நல்லசிவன்  போன்றவர்களின் பணிகளை மக்களி டையே கொண்டு செல்வதும்  அதன் மூலம் மக்களை இயக்கங்களில் பங்  கேற்கச் செய்ய வேண்டும். தோழர்  நல்லசிவன் போன்றோரின் பணிகளை  அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்வது மூத்த மற்றும் இளம் கலை  இலக்கியவாதிகளின் கடமை” என் றார்.