மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 123ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.சரஸ்வதிக்கு வாக்கு கேட்டு மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் திருவள்ளுவர் சாலையில் பிரச்சாரம் செய்தார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், திமுக 123ஆவது ஆ வட்டச் செயலாளர் வில்லவன், மாவட்ட நிர்வாகிகள் மலர், கு.ராஜூ, முல்லை வேந்தன் உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.