தோழர் ஆர். முருகன் நினைவேந்தல்
புதுக்கோட்டை, ஜுன் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விராலிமலை ஒன்றியக்குழு உறுப்பினராகவும், தொண்டைமான் நல்லூர் கிளைச் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றி மறைந்த தோழர் ஆர். முருகனின் படத்திறப்பு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொண்டைமான் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கண்ணம்மாள் தலைமை வகித்தார். தோழர் முருகனின் படத்தை திறந்து வைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் புகழஞ்சலி உரை ஆற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. அன்புமணவாளன், அ. மணவாளன், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் முன்னாள் கோட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எஸ். கலைச்செல்வன், டி.ரகுபதி உள்ளிட்டோரும் புகழஞ்சலி செலுத்தினர்.