tamilnadu

img

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் கல்லூரி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  வேலூரில் கல்லூரி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், செப்.23 - தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் சையது உசேன் தலைமை தாங்க, மாநில செயற்குழு உறுப்பினர் ஆன்ட்ரூ ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் ஜோசப் பெஸ்கி துவக்க உரையாற்ற, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன வாழ்த்தி பேசினார். முன்னாள் மாநிலத் தலைவர் இன்பநாதன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அரசாணை எண் 116 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அனுமதித்துள்ளது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் தட்டச்சர் மற்றும் பண்டகப்பாளர்களுக்கு சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற பணியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்களை பெற்று ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.