பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் உலகளவில் சதுப்புநில காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்திய சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1.வங்காள விரிகுடா பிராந்தியத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம். 2. மேற்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ளும் பகுதி. 3.இலங்கை, மாலத்தீவுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் தெற்கில் உள்ள சதுப்புநிலங்கள்.
உலகின் முதல் இரண்டு சதுப்புநில சுற்றுச் சூழல் அமைப்புகளான - ‘ வார்ம் டெம்ப் நார்த் வெஸ்ட் அட்லாண்டிக்’ “தென் இந்தியா மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவு’ உள்ள ஆபத்தான பிரிவில் ஐந்து பகுதிகள் உள்ளன எனத் தெரி விக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவின் மேற்கு, கிழக்குப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் குறைவான ஆபத்தையே சந்திக்கின்றன.
பிச்சாவரம்
களிமண் நிறைந்த இடத்தில் உவர்ப்பு நீரில் வளர்வதுதான் ‘சதுப்பு நிலக் காடுகள்.’ இவை ‘அலையாத்திக் காடுகள்’ என்றும் அழைக்கப்படு கின்றன. உப்பு நீரில் வளரும் காடுகளாக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இதன் வளர்ச்சிக்கு சிறிதளவு நன்னீரும் தேவைப்படுகிறது. மழைக் காலங்களில் அதிக அளவு நன்னீர் கிடைக்கும்போது, இந்தக் காடுகளின் வளர்ச்சி பெருகுகிறது. மழை நீர் கிடைக்காத போது மரங்கள் வளர முடியாமல், அழியும் நிலை ஏற்படுகிறது. முகத்துவாரம் தடை படுதல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், கால்நடை மேய்ச்சல், இறால் பண்ணை அமைத்தல், துறை முகங்கள் உருவாக்குதல், மாசு படுதல் போன்ற வற்றினாலும் இவை அழிவைச் சந்திக்கின்றன. மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து, மனி தர்களைக் காப்பாற்றும் மிகப்பெரிய வேலையை யும் இந்த சதுப்புநிலக்காடுகள் செய்து வரு கின்றன. நம் நாடு முழுவதும், சுமார் நான்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகளும், உயி ரினங்களும் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகத்தில் 60 சதவீத மக்கள், கடலோரப் பகுதி யில் வாழ்வதாக ஓர் ஆய்வு சொல்கிறது. அவர் க ளை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும் அரணாக சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. சதுப்பு நிலக்காடுகள் இல்லையென்றால், இறால் மீன் களின் வளம் முற்றிலுமாக அழிந்துபோகும். பிச்சாவரம் உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும், இது தோராயமாக 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழல்- சுற்றுலாவிற்கு பிரபலமான இட மாகும். இது ஓபன்பில் நாரைகள் உட்பட பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக (ராம்சர் தளங்கள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர்-முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்புக் நிலக்காடுகளாகும். இது திரு வாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடை யில் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள், பிச்சாவரம், சதுப்புநிலக் காடுகளைவிட பத்து மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிப்பு மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சி நடவடிக்கைகளால் தென்னிந்தியாவில் சதுப்பு நிலங்கள் குறைகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய கடுமையான புயல்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்கவே ‘உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்’ ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் முதன்முறையாக உலகம் முழு வதும் உள்ள சதுப்புநிலங்கள் குறித்து 36 வெவ்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளது. இது குறித்து இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இயக்குநர் ஜெனரல் கிரெடெல் அகுய்லர், “இந்த ஆய்வு உலகெங்கி லும் உள்ள மில்லியன் கணக்கில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களின் முக்கியமான வாழ்விடமான சதுப்புநிலங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பின் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.
20 சதவீதம் அதிக ஆபத்தில்...
மேலும் அவர் கூறுகையில், “பல்லுயிர் பெருக் கத்திற்கான சர்வதேச தினத்தன்று இயற்கைப் பாது காப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்டுள்ள ஆய்வில், சுமார் 1,50,000 சதுர கிலோமீட்டர் பரப்பள வைக் கொண்ட உலகின் 15 சதவீத கடற்கரைகள் சதுப்புநிலங்களால் சூழப்பட்டுள்ளன. காடுகள் அழிப்பு, வளர்ச்சி, மாசுபாடு மற்றும் அணைகள் கட்டுதல் ஆகியவை சதுப்புநிலங்களின் பகுதி கள் வெகுவாகக் குறைவதற்குக் காரணமாகும். ஆய்வு செய்யப்பட்ட 36 பகுதிகளில் கிட்டத்தட்ட 50 சதவீத சதுப்பு நிலங்கள் குறையும், சதுப்பு நிலங்கள் குறைவது பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும். சில மதிப்பீடுகளின்படி, சதுப்புநிலப் பகுதிகளில் 20 சதவீதம் அதிக ஆபத்தில், அதா வது அழியும் நிலையில் உள்ளன. 2050-ஆம் ஆண்டில் 5 சதவீத சதுப்புநிலங்கள் அழிந்தும், 16 சதவீத சதுப்புநிலங்கள் நீரில் மூழ்கி யும் போனால் உலகத்தின் நிலை எப்படியிருக்கும்? ‘அடுத்த 50 ஆண்டுகளில் உலகப்பரப்பில் உள்ள சதுப்புநிலங்களில் கால் பகுதி நீரில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடமேற்கு அட்லாண்டிக் பெருங் கடல், வட இந்தியப் பெருங்கடல், செங்கடல், தென் சீனக் கடல் மற்றும் ஏடன் வளைகுடா கடற்கரைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது”. என்கிறார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதக மான விளைவுகளைக் கட்டுப்படுத்த சதுப்பு நிலங்களைப் பராமரிப்பது அவசியம். ஏனென் றால் சதுப்பு நிலங்களால் மட்டுமே கடல் நீர் மட்டம் திடீரென உயர்வதை சமாளிக்க முடியும். புயல்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து அது பூமியை பாதுகாக்கும்.
18 கோடி டன் கார்பன் இழப்பு
2050-ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாவிட்டால், பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளால் சதுப்புநிலங்களில் சேமிக்கப்படும் 1.8 பில்லியன் (18 கோடி) டன் கார்பனை இழக்க நேரிடும். சதுப்புநிலங்கள், தற்போது கிட்டத்தட்ட 11 பில்லியன் டன் கார்பனை சேமித்து வைக்கின்றன. இது அதே அளவிலான வெப்பமண்டல காடுகளால் சேமிக்கப்படும் கார்பனின் அளவை விட கிட்டத் தட்ட மூன்று மடங்கு அதிகம். சதுப்புநிலங்கள் கடலோரப் பேரழிவுகளிலி ருந்து 150 லட்சம் மக்களையும் ஆண்டுக்கு 65 பில்லி யன் டாலர் மதிப்பிலான சொத்துக்களையும் பாது காக்கின்றன. 2050-ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் போது சதுப்பு நிலங்களில் பாதுகாக்கப்பட்ட சொத்தின் மதிப்பு 118 பில்லி யன் டாலராக உயரும். சதுப்பு நிலங்களில் ஆண்டொன்றுக்கு 1,260 லட்சம் மீன்பிடி நாட்களை மீன்பிடித் தொழிலா ளர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கடல் மட்டம் உயர்வை தடுக்க...
நல்ல வண்டல் மண்ணை பாதுகாக்க வேண் டும். சதுப்புநிலங்களை உள்நாட்டில் விரிவுபடுத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கடல் மட்டம் உயர்வதை சமாளிக்க உதவும் என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே காணாமல் போன சதுப்புநிலங்களை மீட்டெடுக்க வேண்டும். 1996 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடை யில் 5,000 சதுர கிலோமீட்டர் சதுப்புநிலங்கள் காணாமல் போயுள்ளன என்று 2022-ஆம் ஆண்டு வெளியான உலகளவில் சதுப்புநில மாற்றம் பற்றிய ஆய்வு தெரிவிப்பதாக இயற்கை பாது காப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் நிர்வாகி மார்கோ வால்டெரபானோ ஏஜென்ஸ், பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்