tamilnadu

img

தூய்மைப்பணியாளர் மற்றும் ஓட்டுநர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

தூய்மைப்பணியாளர் மற்றும் ஓட்டுநர்கள்
பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் 

நாகப்பட்டினம், ஜூலை 17-  நாகப்பட்டினம் நகராட்சி தூய்மைப்பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர் சங்கத் தலைவர் எஸ்.சுதா, ஓட்டுநர் சங்கத் தலைவர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்க நிர்வாகிகள் கே.தனலெட்சுமி, எஸ்.செல்வி, எஸ்.திராவிடமணி, ஏ.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டத் தலைவர் ஏ. சிவனருட்செல்வன், மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மாவட்ட துணைத் தலைவர் பி.ஜீவா, துணைச் செயலாளர் ஏ.எஸ்.பழனியம்மாள், மாவட்டக்குழு உறுப்பினர் வி.கவிதா, நாகப்பட்டினம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். நாகப்பட்டினம் நகராட்சி தூய்மைப்பணியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட தினக்கூலியை வழங்க வைண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2024 டிசம்பர் மாதம் உரியமுறையில், சங்கத்தின் சார்பில் மனுவளித்தும், ஆறு மாதங்களை கடந்த பின்னரும் உரிய ஊதியம் வழங்காததை கண்டித்தும், தொழிலாளர் ஈட்டுறுதி பிடித்தம், சேம நலநிதி பிடித்தம் செய்யப்படாதது, தொழிலாளர் தினமான மே தினத்திற்கு விடுப்பு வழங்காமல் ஊதியப் பிடித்தம் செய்ததைக் கண்டித்தும், பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.