tamilnadu

img

சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

திருவாரூர், ஆக. 26-  சிஐடியு திருவாரூர் மாவட்ட 10 ஆவது மாவட்ட மாநாடு வரவேற்பு குழு கூட்டம், குடவாசல் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரவேற்பு கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா  தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் கூட்டத்தை  துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.வீரபாண்டி யன், கே.பி. ஜோதிபாசு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேசினார்கள். மாவட்டச்  செயலாளர் இரா.மாலதி, வரவேற்பு குழு நிர்வாகிகளை அறிவித்து பேசினார், வரவேற்பு குழு தலைவராக ஜி.சுந்தர மூர்த்தி, செயலாளராக டி.ஜி. சேகர், பொரு ளாளராக டி.லெனின் மற்றும் 32 மாவட்ட துணை நிர்வாகிகள், மாவட்டக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழு தலைவர் ஜி. சுந்தரமூர்த்தி நிறைவு செய்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சிஐடியு இணைப்பு சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  செப்டம்பர் 24 ஆம் தேதி (புதன்கிழமை) 10 ஆவது மாவட்ட மாநாட்டை  குடவாசலில் உள்ள ஜிடி மஹாலில் நடத்து வது, முன்னதாக, ஓகை ஆற்றுப்பாலத்தில் இருந்து இந்திய தொழிற்சங்கத்தின் மாபெரும் பேரணி கோரிக்கை முழக்கத்து டன் புறப்பட்டு மாநாட்டு அரங்கை அடைவது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.