மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிஐடியு ரூ.30 ஆயிரம் நிதி வழங்கல்
திருவாரூர், ஜூலை 3 - சிஐடியு பேரவை திருவாரூர் மாவட்ட மைய அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்றது. பேரவைக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வீரபாண்டியன், கே.பி.ஜோதி பாசு மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம், கட்டுமான சங்கம், முறைசாரா தொழிலாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சிஐடியு இணைப்பு சங்கத்தி னர் கலந்து கொண்டனர். பேரவையில் சிஐடியு மாவட்ட மையத்திலிருந்து கட்சி நிதியாக ரூ.30,000 சிபிஎம் மாவட்டச் செயலா ளர் டி.முருகையனிடம், சிஐடியு மாவட்டச் செயலாளர் மாலதி, தலைவர் அனிபா மற்றும் சிஐடியு அரங்கத்தினர் வழங்கினர். ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெருந்திர ளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.