ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்: நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
உடுமலை, செப்.15- உடுமலை தாராபுரம் சாலையில் ஆக்கிர மிப்புகள் அகற்றம் என்ற பெயரில் கடை முத லாளிகளுக்கு ஆதரவாக வாடகைக்கு செல் லும் வாகனங்களை அகற்ற சொல்லும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண் டித்து திங்களன்று உடுமலை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தின் முன்பு சிஐடியு மோட் டார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மோட்டார் சங்கத்தின் தலைவர் கே.தண்டபாணி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், ஆட்டோ சங்க மாவட் டச் செயலாளர் சிவராமன், மாவட்டத் தலை வர் விஸ்வநாதன் மற்றும் விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பஞ்ச லிங்கம், சிஐடியு பஞ்சாலை சங்கத்தின் மாவட்டத்தலைவர் செல்வராஜ், சங்கத்தின் உடுமலை நிர்வாகிகள் ஜஹாங்கீர், சுதாசுப்பி ரமணியம், இயோசுராஜ், தோழன்ராஜா, சக்திவேல் மற்றும் கிளை நிர்வாகிகள் முகமது ஹக்கீம், திருமலைசாமி, ரமேஷ்குமார் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகரில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நட வடிக்கை எடுக்காமல், தங்களுக்கு ஆதாயம் தரும் கடை முதலாளிகளுக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத் துறை செயல்படுகிறது. மேலும், வாடகைக்கு செல்லும் மினி ஆட் டோக்களை எடுக்க சொல்கின்றனர். சட்டத் திற்கு புறம்பாக செயல்படும் நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை வேண்டும். மேலும், கடந்த காலங்களில் உடுமலை நகரில் நெடுஞ்சாலை யில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டி டங்களை அகற்றாமல் இருப்பதற்கான கார ணங்கள் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.