tamilnadu

img

புதுச்சேரி தியாகிகளுக்கு சிஐடியு அஞ்சலி!

புதுச்சேரி தியாகிகளுக்கு சிஐடியு அஞ்சலி!

புதுச்சேரி, ஜூலை 30 -  புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு  ஆட்சியாளர்களை எதிர்த்து 8 மணி  நேர வேலை உரிமை கேட்டு 1936  ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றது. தொழி லாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மாறாக, பிரெஞ்சு ராணுவம் சுழல் பீரங்கி களைக் கொண்டு 12 தொழிலாளர் களைச் சுட்டுக் கொன்றது.  இதில், வீர மரணமடைந்த தியாகிகளை நினைவு கூறும் வகை யில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  30 அன்று, புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள சுதேசி பஞ்சாலை  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.  அதன்படி புதனன்று நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலை வர் பிரபுராஜ் தலைமை தாங்கி னார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சீனு வாசன், மூத்த தொழிற்சங்க தலைவர் முருகன், சிபிஎம் புதுச்சேரி மாநி லச் செயலாளர் எஸ்.ராமச்சந்தி ரன், மாநில செயற்குழு உறுப் பினர்கள் வெ. பெருமாள், இரா.ராஜாங்கம், கொளஞ் சியப்பன் உட்பட திரளான சிஐடியு  தொழிலாளர்கள் கலந்து கொண்டு  தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மறைமலை அடிகள்  சாலையில் துவங்கி ஊர்வலம் நடை பெற்றது. ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர் களும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.