tamilnadu

உலகச் செய்திகள்

சீனாவின் உற்பத்தித்துறை தொடர்ந்து முன்னேற் றம் கண்டு வருகிறது. மிகவும் அத்தியாவசியத் தேவையான சில மூலப் பொருட்களின் விலைகள் கடந்த ஒரு ஆண்டில் அதிகரித்துள்ளன. உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்படாததால்தான் இந்த விலை அதிகரிப்பு என்றும், அந்தத் துறையில் தொடர் முன்னேற்றம் இருப்பதால்தான் விலை அதிகரிப்பை யும் தாக்குப் பிடிக்க முடிகிறது என்று சீனாவின் தேசிய புள்ளிவிபரக்குழு வெளியிட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனால் பாக்லாந்து என்றும், அர்ஜெண்டினா வால் மால்வினாஸ் தீவுகள் என்றும் அழைக் கப்படும் பகுதியில் புதிய ஆயுதங்களை பிரிட்டன் குவித்து வருகிறது. இதற்கு அர்ஜெண்டினா கடுமை யான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்தத் தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என்று அர்ஜெண்டினா கோரி வருகிறது. 1982 ஆம் ஆண்டில் இந்தத் தீவுகளுக் காக ஒரு போரும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறை வானதாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெ ரிக்கா கணித்துள்ளது. முதல் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 4 விழுக்காடாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என்றும், ஒரு விழுக்காடுதான் வளர்ச்சி இருக்கும் என்றும் தற்போது பேங்க் ஆப் அமெரிக்கா அந்தக் கணிப்பைத் திருத்தியி ருக்கிறது. ஓமைக்ரான் பரவல் காரணமாக இந்த மாற்றம் இருக்கும் என்றும் பேங்க் ஆப் அமெரிக்கா கூறியிருக்கிறது.