tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றார்

சென்னை: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் வலுவூட்டும் விதமாக ஜெர்மனி மற்றும் இங்கி லாந்து நாடுகளுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பய ணத்தை சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்த பயணத்தில் முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய நோக்கமாக இருப்பினும், சில முக்கிய மான கருத்தரங்குகளிலும் பங்கேற்க உள்ளார். குறிப்பாக, செப். 4 ஆம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சுயமரி யாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை  பெரியார் உருவப் படத்தை திறந்து வைக்க உள்ளார். இத னால், தமிழ்நாட்டில் புரட்சி கண்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகளாவிய கவனத்தை ஈர்க்க உள்ளது. இந்த பயணம் செப். 7 ஆம் தேதி நிறைவடைந்து, செப். 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் முதல மைச்சர். இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடு களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சனிக்கிழமை (ஆக.30) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சரை அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் புத்தகங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் ஊடகவிய லாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “திமுக ஆட்சி அமைந்தது முதல் இதுவரை தமிழகத்திற்கு 10.62 லட்சம்  கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள தாகவும், 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார். வெளிநாட்டு பயணம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர், “எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி, தனது பயணம் போல் இருக்கும் என்று நினைக் கிறார். நான் கையெழுத்து போட்டது நடைமுறைக்கு வந்துள்ளது” என்றார். புதிய கட்சிகள் வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டு இருக்கிறார்கள், அது தான் உண்மை” என்று தெரிவித்தார்.

ஓய்வு நாளில் அரசு ஊழியர்கள்  இடைநீக்கம் இல்லை

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறி வித்ததன் அடிப்படையில், இந்த அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் உரிய நாளில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். குற்றச்சாட்டு கள் மீதான விசாரணை முடிவடைந்த பிறகே பணப் பலன்களைப் பெற முடியும். இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.

விதிகளில் திருத்தம்

சென்னை: வாகனங்களுக்கான பேன்சி எண் ஒதுக்கும்  நடைமுறையில் மாற்றம் செய்து, ஏல முறையில் எண் ஒதுக்கும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000, பேன்சி எண்ணுக்கான அடிப்படை விலை  ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: திருவள்ளூர் கோலப்பன் சேரியில் விதி களை மீறி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்யப்பட்டிருந்தது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு களுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை  தள்ளு படி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகை யில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மீனவர்களை காப்பாற்ற  ‘கடல் ஆம்புலன்ஸ்’ அவசியம்

சென்னை: கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல்  ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​.எஸ்​ .சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார்.  இந்​திய கடலோரப் பகு​தி​களுக்​கான பல்​வகை ஆபத்து  சேவை​கள் குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் வெள்ளியன்று  நடை​பெற்​றது. இதில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன  தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் பங்​கேற்று பேசுகையில், “மீன வர்​கள் நலன் காக்க எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனம்  சார்​பில் ‘மீனவ நண்​பன்’ என்ற ஸ்மார்ட் போன் செயலியை உரு ​வாக்கி இருக்​கிறோம். அதில் வானிலை நில​வரம், காற்று வீசும்  திசை, வேகம், மீன்​கள் அதி​க​மாக இருக்​கும் இடங்​கள் போன்ற  தகவல்​களை வழங்கி வரு​கிறோம். மீனவர்​கள் ஆழ்​கடலில் மீன் பிடிக்​கும்​போது, மாரடைப்பு போன்ற பல்​வேறு உடல்​நலக்​குறைவு ஏற்​படு​கிறது. அப்​போது அவர்​களைக் காப்​பாற்ற முடி​யாமல் உயி​ரிழப்பு நேரிடு​கிறது. நிலப் பகு​தி​களில் அரசு சார்​பில் ஆம்​புலன்ஸ் சேவை உள்​ளது.  அதே​போல், ‘கடல் ஆம்​புலன்ஸ்’ சேவையை அவசி​யம் ஏற்​படுத்த வேண்​டும்” என்றார்.

மீனவர்களை காப்பாற்ற  ‘கடல் ஆம்புலன்ஸ்’ அவசியம் சென்னை:

கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல்  ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​.எஸ்​ .சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார்.  இந்​திய கடலோரப் பகு​தி​களுக்​கான பல்​வகை ஆபத்து  சேவை​கள் குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் வெள்ளியன்று  நடை​பெற்​றது. இதில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன  தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் பங்​கேற்று பேசுகையில், “மீன வர்​கள் நலன் காக்க எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனம்  சார்​பில் ‘மீனவ நண்​பன்’ என்ற ஸ்மார்ட் போன் செயலியை உரு ​வாக்கி இருக்​கிறோம். அதில் வானிலை நில​வரம், காற்று வீசும்  திசை, வேகம், மீன்​கள் அதி​க​மாக இருக்​கும் இடங்​கள் போன்ற  தகவல்​களை வழங்கி வரு​கிறோம். மீனவர்​கள் ஆழ்​கடலில் மீன் பிடிக்​கும்​போது, மாரடைப்பு போன்ற பல்​வேறு உடல்​நலக்​குறைவு ஏற்​படு​கிறது. அப்​போது அவர்​களைக் காப்​பாற்ற முடி​யாமல் உயி​ரிழப்பு நேரிடு​கிறது. நிலப் பகு​தி​களில் அரசு சார்​பில் ஆம்​புலன்ஸ் சேவை உள்​ளது.  அதே​போல், ‘கடல் ஆம்​புலன்ஸ்’ சேவையை அவசி​யம் ஏற்​படுத்த வேண்​டும்” என்றார்.