பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்!
சென்னை, செப். 15- பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (செப்.15) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார். மிகவும் வறுமையில் வாழும் குடும்பங் களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதி யாக ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர் இரு வரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒரு வரை இழந்து மற்றொரு பெற்றோரால் பரா மரிக்க இயலாத குழந்தைகளை அரவ ணைத்துத் தொடர்ந்து பாதுகாக்கும் வகை யில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை கள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூபாய் 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும். இந்நிலையில், திட்டத்தைத் துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிகழ்ச்சியின் போது, பெற்றோர் இருவரை யும் இழந்து, 12 ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப் பட்டுள்ள மாணவ - மாணவிகளுக்கு மடிக் கணினிகளையும் வழங்கினார்.
