tamilnadu

img

50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா

நாகப்பட்டினம், பிப்.9 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மாணலூர் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மாணலூர் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த விழா சிபிஎம் கிளை  செயலாளர் ஆர்.கே.கேசவன் தலைமை யில் நடைபெற்றது. கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் வர வேற்றார். உழைப்பாளி வர்க்கத்தின் ஒப்பற்ற செங்கொடியை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான பெ.சண்முகம் ஏற்றி வைத்து, கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று, சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினர். கட்சியின் மாவட்ட செயலாளர் வி.மாரி முத்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பின ரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பின ருமான வீ.பி.நாகைமாலி கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், ப.சுபாஷ் சந்திரபோஸ்,  என்.எம்.அபூபக்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.என்.அம்பிகாபதி, ஏ.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கறி ஞர் எஸ்.அம்பேத்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.