இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் வெள்ளியன்று (பிப்.24) தொடங்கியது. சனிக்கிழமை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்தும் அதன் மீதான இயக்கங்களை திட்டமிடுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.