tamilnadu

img

கவிஞர் தமிழ்ஒளி பெயரில் தமிழ் இருக்கை அமைத்திடுக!

சென்னை, செப்.21- கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பல்க லைக் கழகம் ஒன்றில் ஆய்வு  இருக்கை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கவிஞர் தமிழ்ஒளி 98வது பிறந்த நாள் கருத்தரங்கம் புதனன்று (செப். 21) எஸ்ஐஇடி கல்லூரியில் நடை பெற்றது. ஜஸ்டிஸ் பஷீர் அஹமத்  சையீத் மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி) தமிழ்த்துறையும், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா குழுவும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. இந்நிகழ்விற்கு விழாக்குழு தலை வர் சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். கருத்தரங்கின் நோக்கத்தை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா  விளக்கினார். கவிஞர் தமிழ்ஒளி சிறு கதை மாந்தர்களை மையப்படுத்தி பேரா. மணிகோ. பன்னீர்செல்வம் பேசினார். இந்நிகழ்வில் பேசிய விழாக்குழு செயலாளர் இரா.தெ. முத்து, “தமிழகத்தின் ஏதாவது ஒரு  பல்கலைக் கழகத்தில் கவிஞர் தமிழ்  ஒளி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். சென்னை நக ரில் தெரு ஒன்றிற்கு அவரின் பெயரை சூட்டுவதோடு, கடற்கரையில் சிலை நிறுவ வேண்டும்.  

அறக்கட்டளை தொடங்குக!

தமிழ்ஒளி பெயரில் அறக்கட் டளை தொடங்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கடந்தாண்டு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு அளித்தோம். அதை முதலமைச்சரின் கவனத்  திற்கு கொண்டு சென்று நிறை வேற்றுவதாக உறுதி கூறினார். நூற்  றாண்டு விழாவிற்குள் கோரிக்கை கள் சாத்தியப்படும் என்று எதிர் பார்க்கிறோம்” என்றார்.

நினைவு அறக்கட்டளை

சென்னை பல்கலைக் கழ கத்தின் தமிழ்த் துறையில் ‘கவிஞர்  தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை’ விழாக்குழுவினர் உருவாக்க உள்ள னர். இதற்காக 5 லட்சம் ரூபாய்  தேவைப்படுகிறது. இந்த அறக்கட்ட ளைக்கு பேரா.இ.சா.பர்வீன் சுல் தானா 25 ஆயிரம் ரூபாயை விழாக்  குழு பொருளாளர் வே.மணியிடம் வழங்கினார்.

தமிழ்இலக்கிய மன்றம்

இந்நிகழ்விற்கு முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ தொடக்க விழா நடைபெற்றது. இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசி னார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்  வர் அம்துல் அஜீஸ், பேரா.ஜோதி லட்சுமி உள்ளிட்டோர் பேசினர். முனை  வர் ஒ.நசீமா பானு நன்றி கூறினார்.


 

;