tamilnadu

img

கவின் கொலையில் குடும்பமே சேர்ந்து சதி

கவின் கொலையில் குடும்பமே சேர்ந்து சதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்

திருநெல்வேலி, செப். 17 - தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத் தைச் சேர்ந்த சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் சாதி ஆணவக்கொலை செய்யப்பட்டது, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலையாளி சுர்ஜித்தின் தந்தை யும், காவல் சார்பு ஆய்வாளருமான சரவணன் தனக்கு ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்த  நிலையில், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சார்பு ஆய்வாளர் சரவணனின் ஜாமீன் மனு விசாரணையின் போது, சிபிசிஐடி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தற்போது  வெளியாகியுள்ளன. அதில், கவின் செல்வ கணேஷை படுகொலை செய்வதற்கு, முழு குடும்பமும் சதியில் ஈடுபட்டுள்ளது என்று சிபிசிஐடி  வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளார். செவ்வாயன்று ஜாமீன் மனு மீதான விசார ணையின் போது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி கூறியதாவது: வழக்கின் முதன்மை குற்றவாளியான சுர்ஜித் தின் திட்டம் குறித்து அவரது பெற்றோர் முன்கூட்டியே அறிந்திருந்தனர். குற்றப்பத்திரி கையில் பெயர் கூறப்பட்டுள்ள சரவணனின் மனைவி கிருஷ்ணகுமாரி தற்போது தலைமறை வாக இருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 58 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 19  ஆவணங்களும், சி.சி.டி.வி. காட்சிகளும் கைப் பற்றப்பட்டுள்ளன. சரவணன், சுர்ஜித் ஆகி யோரை காவலில் எடுத்து அவர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன.  சரவணனின் வாக்குமூலத்தின் அடிப்படை யில், அவரது உறவினரான ஜெயபால் கைது செய்யப்பட்டார். கவின் மற்றும் தனது மகள் சுபாஷினி இடையேயான காதல் தொடர்பை, கவின் கொலைச் சம்பவத்திற்கு முன்னரே சர வணன் அறிந்திருந்தார். அவர் போலி எண் கொண்ட இருசக்கர வாகனத்தை வாங்கி தனது மகன் சுர்ஜித்திற்கு கொடுத்துள்ளார். கவின் கொலை செய்யப்பட்ட பின், ஆதாரங்களை அழிக்க ஜெயபாலின் குவாரிக்குச் சென்று சான்று களை எரிக்கும்படி சரவணன் தூண்டியுள்ளார். குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டு உள்ள கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப் படவில்லை. கவின் மற்றும் சுபாஷினி இடையே யான காதலை சரவணன் மற்றும் அவரது குடும் பத்தினர் விரும்பாததால், குடும்பமே சேர்ந்து சதி  செய்துள்ளது. கவின் மற்றும் அவரது குடும்பத்தினர் கே.டிசி. நகர் மருத்துவமனைக்கு வந்தபோது, சுபாஷினி ‘என் பெற்றோர்கள் உங்களை சந்திக்க விரும்புகிறார்கள்’ என்று கவினிடம் கூறியுள்ளார். அவர் சொன்னதை நம்பித்  தான் சுர்ஜித்துடன் கவின் சென்றுள்ளார். அப்போது  சுர்ஜித் ஏற்கனவே அரிவாளும், மிளகாய்த்தூளை யும் மறைத்துக் கொண்டு சென்றிருந்தார். சுர்ஜித்தின் திட்டம் குறித்து சரவணனும், கிருஷ்ண குமாரியும் அறிந்திருந்தனர். கொலைக்குப்  பிறகு, கிருஷ்ண குமாரி தனது மகனைச் சந்திக்க தனியார் கல்லூரி அருகே சென்றார். மேலும்,  சுர்ஜித்தின் ரத்தம் படிந்த உடையை எரித்து, வாகன  எண் பலகையை அகற்றும்படி தந்தை சரவணன் அறிவுரை வழங்கினார். சம்பவ இடத்திற்கு இருவ ரும் சென்று, ரத்தக் கோலத்தில் கிடந்த கவினை  பார்த்தனர். இதனை ஒரு காவலர் கண்ணால் கண்டுள்ளார்.  இவ்வாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை  வைத்துள்ளார். இதன் காரணமாகவே சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஹேமா, அவர்  சாட்சிகளை அழிக்கும் அபாயம் உள்ளதால், ஜாமீன் மறுக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப் பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.