tamilnadu

img

50 ஆண்டுகால மக்கள் சேவையில் காஸ்ட்ரோ படிப்பகம்

மதுரை மேலப்பொன்னகரம் மெயின் ரோட்டில் அமைந்  துள்ளது காஸ்ட்ரோ படிப்பகம். இந்த  படிப்பகம் துவங்கப்பட்டு 50 ஆவது ஆண்டில் இன்றைய நாளில் அடியெ டுத்து வைத்துள்ளது.  சமூக மாற்றத் திற்கான மக்களுக்கான அரசியலை சொல்லித்தரும் படிப்பகமாகவும்  மக்களுக்கான நலப்பணிகளை செய் யும் மன்றமாகவும் பல பத்தாண்டு களாக தனது பயணத்தை தொடர்ந்  துள்ளது. பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று பொதுவாக மாண வர்கள் அழைப்பதுபோல், காஸ்ட்ரோ படிப்பகத் தோழர்கள் என்று இந்த படிப்பகத்தைச் சேர்ந்தவர்களை மதுரையில் கட்சியினர் அழைப்ப துண்டு. ,இத்தகைய படிப்பகத்தை உருவாக்கிய ஸ்தாபக தலைவர் களில் ஒருவரான பால்சாமி மற்றும்  முத்துப்பாண்டி ஆகியோர் இது குறித்து கூறியதாவது: பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்த தோழர்கள் இணைந்து 1974 ஆம் ஆண்டு உருவாக்கியதுதான் காஸ்ட்ரோ படிப்பகம். படிப்பகம்  துவங்க உந்து சக்தியாக இருந்தது எல்ஐசி  தோழர் ராமன் . இவர்  பஞ்சாலைத் தொழிலாளர்கள் அலு வலகத்தில் அரசியல் வகுப்பு ஒன்று  நடத்தினார்.அதில் கியூபா புரட்சியா ளர்கள் பிடல் காஸ்ட்ரோ,சே குவேரா குறித்து பேசினார்.  இதன்பின்னரே ஃபிடல் காஸ்ட்ரோ பெயரில் படிப்ப கத்தை உருவாக்கினர்.

படிப்பகத்தை உருவாக்கிய தோழர்கள் பல இன்று  உயிரோடு இல்லை. அதில் குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.  மோகன் போன்றோர் குறிப்பிடத்தக்க வர்கள். அதேபோல் இன்றைக்கு இயக்க பணிகளில் பங்காற்றி வரும்  தோழர்கள் பிச்சை மணி, ஜெய ராமன், கேசவன், அழகர், பால்சாமி, ராம்நாடு (எ) ராஜேந்திரன், அரிய நாதன், சுந்தரம், மதுரை பாலன்,  சால மன், ஜி. ஜே. ராஜன் என எண்ணற்ற  தோழர்கள் முயற்சியால் உருவானது தான் காஸ்ட்ரோ படிப்பகம்.

படிப்பகம் துவங்கி மக்கள் பணி

அரசு ராஜாஜி மருத்துவமனை யில் ரத்தம் தேவைப்படுபவர் களுக்கு ரத்ததானம் செய்வது.  இரத்த தான முகாம் நடத்துவது, டியூஷன் சென்டர் நடத்துவது ,அரசு ராஜாஜி மருத்துவமனையில் இப்பகுதி மக்  கள் அனுமதிக்கப்பட்டால் அவர் களுக்கு  உதவி செய்வது மற்றும்  பொதுப்பிரச்சனைகளில் தலை யிட்டும் தீர்வுகண்டுள்ளோம்

இயக்கப் பணிகளில்...

ஆரிய பவன் உணவகத்தில் ஒரு  தொழிலாளி வேலையை விட்டு நீக்கப்பட்டபோது அவருக்கு ஆத ரவாக தினசரி ஆரிய பவன் உணவ கத்திற்கு சென்று 50 தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். . அதே போல் அரசு ஊழியர்கள், பஞ்சாலை  தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் அவர்களுக்கு ஆதரவாக பங்கெ டுத்து சிறை செல்வது, காஸ்ட்ரோ படிப்பகத்தின் 50 தோழர்கள் சைக்கி ளில் கிராமம் கிராமமாக சென்று விவ சாயிகள் சங்க உறுப்பினர் சேர்க்கை  நடத்துவது. பகுதியில் உள்ள மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக் காக தலையீடு செய்வது. ரேசன்  கடையில் நடைபெறும் முறை கேட்டை நேரடியாக சென்று தட்டிக் கேட்பது  என்று இன்றுவரை தொடர்ந்து  இப்ப பணிகளை காஸ்ட்ரோ படிப்  பக தோழர்கள் செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பேடாக கரும்பலகை

கல்லூரியில் படிக்கும் மாண வர்கள் பலரும் இங்குள்ள தகவல் கரும்பலகையில் எழுதப்படும் செய்திகளை குறிப்பாக எடுத்துக் கொண்டு கல்லூரியில் போய் பேசு வர். மறைந்த நாடாளுமன்ற உறுப்பி னர் பொ. மோகன் அவர்கள் தினசரி நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்து அதில் தேவையான செய்தி களை மக்களுக்காக கரும்பலகை யில் எழுதி வந்தார். இது மக்களுக்கு  மட்டுமல்லாமல் படிக்கும்  மாண வர்களுக்கு பெரும் பயனாக இருந் தது என்பது  பெருமைக்குரிய விஷ யமாக உள்ளது.

மக்கள் விரும்பிய  காஸ்ட்ரோ படிப்பகம் 

இப்பகுதியில் உள்ள இளைஞர் களை குடும்பத்தில் உள்ளவர்கள் படிப்பகத்திற்கு  சென்று படிக்க சொல்வது, இங்கு உறுப்பினராக சேர சொல்வது என்று மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பை பெற்ற படிப்பாக காஸ்ட்ரோ படிக்கவும் திகழ்ந்து வருகிறது. மேலப்பொன்னகரம்  பகுதியை சுற்றி படிப்பகம் துவங்குவதற்கு உந்து சக்தியாக இருந்தது காஸ்ட்ரோ படிப்பகம்தான். .திமுக, காங்கிரஸ், அதிமுக, பார்வர்ட் பிளாக் போன்ற கட்சிகளுக்கு இப் பகுதியில் படிப்பகங்கள் இயங்கி வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் நேதாஜி, தூக்கு மேடை  தியாகி பாலு, கார்க்கி, ஏ. கே. கோபா லன், மாவீரன் பகத்சிங், மகாகவி  பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்  தரம் போன்ற தலைவர்கள் பெயரில்  படிப்பகங்களை துவங்குவதற்கு உந்து சக்தியாக இருந்தது காஸ்ட்ரோ படிப்பகம். இங்குள்ள   தோழர்கள் அப்பகுதிகளில் உள்ள தோழர்களை இணைத்து படிப்பகங்களை துவங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். இன்றைக்கும் இந்த படிப்பகங்களும் செயல்பட்டு வரு கின்றன என்றால் அதில் காஸ்ட்ரோ படிப்பகத் தோழர்களின் பங்கு மிகப்பெரியது என்பது ஒரு பெரு மைக்குரிய விஷயமாகும்.

சாதி மறுப்பு திருமணம்

சாதிய உணர்வுகளை தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சாதி  மறுப்பு திருமணம் செய்பவர்களை ஊக்கப்படுத்தி அதிக அளவில் சாதிய மறுப்பு திருமணங்களை காஸ்ட்ரோ படிப்பகம் செய்துள்ளது. இது சாதியத்திற்கு எதிராக நடத் தப்பட்ட ஒரு புரட்சியாகவே நாங் கள் கருதுகிறோம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டு கழகம் 1985  ஆம் ஆண்டு காஸ்ட்ரோ படிப்பகம்  மூலம் துவங்கப்பட்டது. அரசரடி  ரயில்வே மைதானத்தில் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கேரளா விளையாட்டு துறை அமைச்  சராக இருந்த  விஜயராஜன் அன்  றைக்கு வாலிபர் சங்கத்தின் அகில  இந்திய தலைவர்களில் ஒருவராக  இருந்த நாடாளுமன்ற உறுப்பினராக வும் இருந்து செயல்பட்ட தோழர்  எம். ஏ. பேபி போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல் கேரள மாநிலத்திலும் வாலிபர் சங்கத்திற்கு என்று ஒரு  விளையாட்டு கழகத்தை துவங்கு வதற்கான ஏற்பாடுகளை செய்திடு வோம் என்று அவர்கள் கூறினர்.  அதே போல் வாலிபர் சங்க விளையாட்டு கழகத்தில் நடைபெற்ற போட்டி களில் பங்கெடுத்து வெற்றி பெற்ற பல்வேறு தோழர்கள் ரயில்வே, காவல்துறை என்று பல்வேறு அரசு  பணிகளில் சேர்ந்தார்கள். இன்றைக்கு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காஸ்ட்ரோ படிப்பகம் தொடர்ந்து மக்கள் பணி களை செய்யும். இன்னும் பல்வேறு  இளைஞர்களை சமூகமாற்றத்திற் கான களப்பணியில் கொண்டுவர தொடந்து பயணிக்கும் என்று பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் தெரிவித்தனர்.  இன்று காஸ்ட்ரோ படிப்பகம் 50 ஆவது ஆண்டு பொன்விழா.

தொகுப்பு: ஜெ.பொன்மாறன்

 

 

 

;