நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்கு
சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர் நீதித் துறையை அவமதிக்கும் வகை யிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறி ஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப் பதிய உத்தர விடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண் டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளு படி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப் பதிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்.22 வரை 147 சிறப்பு ரயில்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வேயில் அக்.22 ஆம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.20 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, தெற்கு ரயில்வே சார்பில், அக்.16 முதல் 22 அன்று வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, கடந்த அக்.16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண் டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நக ரங்களில் இருந்து மொத் தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை (அக்.18) சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன. ஞாயிறன்று (அக்.19) 19 சிறப்பு ரயில் கள் இயக்கப்பட்டன. தீபாவளி நாளான திங்கட்கிழமை மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 23 சிறப்பு ரயில் கள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று, தீபா வளிக்கு மறுநாள் செவ் வாய்க்கிழமை (அக்.21) 25 சிறப்பு ரயில்களும், அக்.22 அன்று 19 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
தூத்துக்குடி: திருச் செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்கள், அதற்கு முந் தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் உள்வாங் குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், திருச் செந்தூர் கோவில் அருகே ஞாயிறன்று நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யாகோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத் திற்கு கடல் உள்வாங்கிய தால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந் தன.