tamilnadu

கார்பன் டை ஆக்சைடை கடலில் கரைக்க முடியுமா?

புவி வெப்பமாதல் அபாயம் குறித்து விஞ்ஞானி களும் சூழலியளார்களும் கவலை தெரி வித்து வருகின்றனர். 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்  படி 2030ஆம் ஆண்டிற்குள் 1.5-2 டிகிரி வெப்பம் குறைக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட 195 நாடுகளும் தங்கள் இலக்குகளை முடித்  தாலுமே இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் புவி வெப்பம் 2.7 டிகிரி அதிகரிக்கும் என்று 26.10.2021 தேதியிட்ட சயின்ஸ் நியூஸ் கட்டுரை கூறுகிறது. இதில்  கார்பன் டை ஆக்சைடு மாசு நீக்கமே முக்கியமாகும்.  வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்கும் தற்போதய அமைப்புகள் 2 பில்லியன் டன்  களை அப்புறப்படுத்துகின்றன. ஆனால் மனித குலம்  ஆண்டுதோறும் வெளிவிடும் மொத்த கார்பன் டை ஆக்ஸைடு 37 பில்லியன் டன்கள். நிலத்தை அடிப்ப டையாகக் கொண்டு மரம் நடுதல், கடலோர சுற்றுச்  சூழலை மீட்பது, நேரடியாக வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுப்பது போன்ற முறைகளில் 10 பில்லியன்  டன்களை நீக்கலாம். இப்படிப்பட்ட கணக்கீட்டில் உணவு, தண்ணீர், பல்லுயிர் பாதுகாப்பு ஆகிய வற்றிற்கு தேவையான நிலப்பகுதியை ஒதுக்க வேண்டும். ஆகவே விஞ்ஞானிகளின் கவனம் இப்  போது கடலின் பக்கம் திரும்பியுள்ளது. கடலில்  நிலத்தைப் போல 19 மடங்கு அதிகம் CO2 ஐ சேமிக்க லாம். கடல் மூலம் கார்பன் டை ஆக்ஸைடை நீக்கு வதற்கு கடலிலுள்ள ஒளிச்சேர்க்கை செய்யும் தாவ ரங்களை அதிகரிப்பது, தண்ணீரின் காரத்தன்மை யை அதிகரித்து அதன் மூலம் அமிலத்தன்மை கொண்ட கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொள்  வது, நீரிலிருந்து நேரடியாக கார்பன் டை ஆக் சைடை பிரிக்கும் பெரும் கட்டுமானங்களை கடலில்  நிறுவுவது போன்றவை அடங்கும். ஆனால் இதில் சில பிரச்சனைகள் உள்ளன. இவைகளெல்லாம் அதி கம் சோதிக்கப்படாதவை. கடல் நீரானது சிக்கலான தும் இயங்கிக்கொண்டே இருப்பதுமாகும். அதனால்  அதன் மாறும் வேதித்தன்மையை கண்காணிப்பது மிகவும் கடினமானது. கடலின் பெரும்பகுதிகள் குறித்து அடிப்படை தரவுகள் இல்லாததால் கார்பன்  டை ஆக்சைடு பிரித்தெடுப்பது எவ்வாறு செயல்படு கிறது என்பதை மதிப்பிடுவது கடினம். இப்போ துள்ள சென்சார் போன்ற முறைகள் பிரச்சினையை எதிர்கொள்ள போதுமானதல்ல. இதற்கு மேலாக இதனால் ஏற்படும் சுற்று சூழல் தாக்கம் குறித்து நீண்ட காலமாக கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்  துள்ளன. ஒரு பகுதியில் நீரின் தன்மையில் ஏற்படும்  மாற்றம் அடுக்கடுக்காய் விளைவுகளை ஏற்படுத்த லாம். கடல் தாவரங்களின் வளர்ச்சியை அதிகரிக் கும்போது உணவு வளையம் மாறலாம். பசுமைக் குடில் வாயுக்களை உண்டாக்கலாம். அதிக அள வில் கடல் தண்ணீரை வேதிப்பொருட்களால் மாற்றும்  போது வட்டார வன உயிர்களுக்கு ஆபத்து உண்டா கலாம். இருந்தாலும் அதன் மூலமே விரைவாக இலக்கை அடைய முடியும். கார்பன் டை ஆக்சைடு குறைவான அளவில் இருந்த பழய காலத்திற்கு திரும்புவதை ‘காலக் கடிகாரம்’ இல் பயணம் செய்  வது போல என்கிறார் கடல் ஆய்வாளர் டேவிட்  ஹோ. இப்போதுள்ள கட்டுமானங்கள் மூலம் பிரிக்  கும் முறையில் ஆண்டுக்கு மூன்று விநாடிகள், 100 மில்லியன் மரங்களை நடுவதன் மூலம் ஆண்டுக்கு 33 நொடிகள், கடல் இயல்பாக உறிஞ்சுவதன் மூலம் ஆண்டுக்கு 3 மாதங்கள் பின்னோக்கி செல்லலாம். அதாவது முன்னேறலாம்.

;