கிருஷ்ணகிரி, ஆக.20- கிருஷ்ணகிரி மாவட்டம், கல்கேரி கிராம ஆலய நுழைவு போராட்டத்தின் காரணமாக ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்ட கல்கேரி தோழர் சுரேஷ்-ராஜம்மா இல்ல திருமண விழா முரு கேசன் முன் முயற்சி யிலும் மார்க்சிஸ்ட் கட்சி உதவியுடனும் தேன்கனிக் கோட்டையில் நடை பெற்றது. மாநிலக் குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ், சாம்ராஜ், பிரகாஷ், சுரேஷ், மகாலிங்கம், சி.பி. ஜெயராமன்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, செயலாளர் கள் வெங்கடேஷ்,ராஜா, தேவராஜன், உள்ளிட் டோர் கலந்து கொண்டு மண மக்கள் எம்.சோமசேகர்- எஸ். சுரேகாவை வாழ்த்தினர்.