tamilnadu

img

கண்ணூர் முதல் ஓசூர் வரை பேருந்து ஓசூர் வாழ் கேரள மக்கள் பாராட்டு

கண்ணூர் முதல் ஓசூர் வரை பேருந்த  ஓசூர் வாழ் கேரள மக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி, அக்.22- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில 18வது மாநாடு ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் சிபிஎம் எம்.பியுமான ஏ.ஏ.ரஹீம் சிறப்பு விருந்தினராக மூன்று நாட்களும் பங்கேற்று மாநாட்டைச் சிறப்பித்தார். அப்போது வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்கு வந்திருந்த கேரள மாநி லத்தைச் சேர்ந்த ஓசூரில் வாழ்ந்து வரும் செம்படை குழுவினர் மற்றும் மலையாள மக்கள் எம்.பி ஏ.ஏ.ரஹீமைச் சந்தித்தனர்.  கண்ணூர் முதல் ஓசூர் வரை பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.ஏ.ரஹீமிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது இது குறித்து கேரள மாநில அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுடனும் கேரளா போக்கு வரத்துத் துறையிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.  கோரிக்கையை ஏற்று, 25 ஆண்டு களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கண்ணூர் - ஓசூர் பேருந்தை மீண்டும் இயக்க கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கண்ணூர் முதல் ஓசூர் வரை பேருந்து விடுவதற்கு முயற்சி எடுத்த எம்.பி ஏ.ஏ.ரஹீமுக்கும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும் ஓசூரில் வசிக்கும் கேரள மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.