tamilnadu

img

வரப்பட்டி கிராமத்தில் பொது கழிப்பறை கட்டித் தருக! வாலிபர் சங்க கரூர் மாநகர மாநாடு கோரிக்கை

வரப்பட்டி கிராமத்தில் பொது கழிப்பறை கட்டித் தருக

வாலிபர் சங்க கரூர் மாநகர மாநாடு கோரிக்கை

கரூர், ஜூலை 20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாநகர மாநாடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநகரக் குழு  உறுப்பினர் ராஜீவ் காந்தி தலைமை வகித் தார். மாநிலக் குழு உறுப்பினர் ரெ.சேது பதி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் சதீஷ் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைச்  செயலாளர் ரஞ்சிதா நன்றி கூறினார். கரூர் மாநகரத்தின் புதிய தலைவராக ராஜேந்திர பிரசாத், செயலாளராக சதீஷ்,  பொருளாளராக அன்புச்செல்வன், துணைச்  செயலாளராக மணி, துணைத் தலைவராக கோகிலா உள்ளிட்ட 11 பேர் கொண்ட மாநக ரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். கரூரில் இயங்கி வரும் வேளாண் கல்லூ ரிக்கு புதிய கட்டிடம் உடனே கட்டி கொடுக்க வேண்டும். மாநகரில் அதிகமாக உள்ள தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். கரூர் - திண்டுக்கல் சாலையில் தந்தோணிமலை கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.  வரப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலையை மாற்றிட, பொது கழிப்பறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏமூர் புதூர் பகுதியில் பள்ளி-கல்லூரிகள், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதியில் அரசு மாநகர பேருந்து வசதி  ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.