தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி
தமிழக சுகாதார துறை கோரிக்கை
சென்னை, மே 18 - பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணை யில் எம்எம்ஆர் மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக பொது சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரி கள் கூறுகையில், “குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரி டையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவி, காதுகள் மற்றும் தாடைக்கு இடையே பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சலும், அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படு கிறது. பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலை கள் மூலம் மற்றவர்களுக்கு அந்நோய் பரவு கிறது. ஒரு வாரத்தில் இருந்து 16 நாள்களுக் குள் பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறி குறிகளை வெளிப்படுத்துகிறது. இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவை யில்லை என்றாலும், நோய் தொற்றுக்குள்ளா னவர்கள் தனிமை ப்படுத்தி கொண்டால், பாதிப்பு சரியாகிறது. தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு 61 பேருக்கு மட்டுமே அந்நோய் பாதிப்பு ஏற்பட்டது. 2022-23 ஆம் ஆண்டு 129 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து 1,091 ஆக அதிகரித்தது. தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் எம்ஆர் எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேநேரம், எம்எம்ஆர் எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவ தில்லை. தடுப்பு மருந்துகளை காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இந்த பாதிப்பை சரி செய்து விடும் என்பதால், இதுவரை தடுப்பூசி வழங்கப்படாமல் இருந்தது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பொன்னுக்கு வீங்கிக்கான தடுப்பூசியையும் அட்டவணை யில் சேர்க்க வேண்டும்” என்றனர்.