சிதம்பரத்தில் நூல் வெளியீட்டு விழா தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பங்கேற்பு
சிதம்பரம், செப்.22 - சிதம்பரம் நகர்மன்ற தலைவராகவும் திமுக நகர செயலாளராகவும் பணியாற்றி வரும் கே.ஆர். செந்தில்குமார் “மீண்டும் ஒரு காதல் கடிதம்” என்ற நூலை எழுதினார். அந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முதல்வர் அரங்க.பாரி தலைமை தாங்கினார். மூத்த மருத்துவர் கே.ஆர்.முத்துக்குமரன், வீனஸ் பள்ளி குழும நிறுவனர் எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.மதுமிதா வரவேற்றார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி நூலை வெளியிட்டு உரையாற்றி னார். நூலை, நுரையீரல் சிறப்பு மருத்து வர் பால.கலைக்கோவன் பெற்றுக் கொண்டார். சிபிஎம் மூத்தத் தலைவர் மூசா வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை திமுக துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ, நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன் உள்ளிட்டோர் செய்தனர்.