tamilnadu

img

ஆர்எஸ்எஸ் நிர்வகிக்கும் பள்ளி வளாகத்தில் வெடி குண்டுகள்

ஆர்எஸ்எஸ் நிர்வகிக்கும் பள்ளி வளாகத்தில் வெடி குண்டுகள்

பாலக்காடு கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்கந்தரா வில் உள்ளது ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வியாச வித்யா பீடம் தொடக் கப்பள்ளி. இங்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22 வெள்ளியன்று பள்ளி வளா கத்தில் கிடைத்த வெடிகுண்டை என்னவென்று தெரியாமல் 10 வயது சிறுவன் எடுத்து வெளியே வீசியுள்ளான். இதில் அந்த சிறுவனும், 82 வயது மூதாட்டி ஒரு வரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து பாலக்காடு காவல்துறையினர் வழக்கு பதிந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த னர். அப்போது ஒரு வாளியில் மேலும் 4 வெடி குண்டுகள் கண் டெடுக்கப்பட்டன. பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள் மிகவும் ஆபத்தா னவை என்றும், அவை சக்தி வாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தன என்றும் காவல்துறையின் முதற்கட்ட விசார ணையின் போது தகவல் வெளி யாகியுள்ளது. மேலும் பள்ளிக் குள் வெடிபொருட்கள் எவ்வாறு வந்தன என்பதை விசாரித்து வருவ தாகவும், பலரிடமிருந்து வாக்கு மூலங்களை எடுத்துள்ளதாகவும் பாலக்காடு வடக்கு காவல்துறை தெரிவித்தனர். தடையில்லா  சான்றிதழ் ரத்து இதுகுறித்து கல்வி அமைச்சர் சிவன்குட்டி பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் கூறுகை யில்,”இந்த பள்ளி மத்திய பாடத் திட்டத்தின்படி செயல்படுகிறது. சம்பவம் குறித்து அறிக்கை கிடைத்ததும் பள்ளியின் தடை யில்லா சான்றிதழ் ரத்து செய்யப் படும். விசாரணையில் காவல்துறை யினர் அக்கறையின்மையைக் காட்டுகிறார்களா என்பது குறித்து ஆராயப்படும்” என அவர் கூறி னார்.