tamilnadu

“ஓட்டு அவங்களுக்கு... ஆட்சி எங்களுக்கு...”

நட்டா: வணக்கம்
பத்திரிகையாளர்கள்: வணக்கம் சார்... தேர்தல் வந்துருச்சு... எங்கல்லாம் ஜெயிக்கப் போறீங்க..
நட்டா: தேர்தல் நடந்து முடிஞ்சு எவ்வளவு பேரு தாவுறதுக்கு தயாரா இருப்பாங்கனு பாக்கணுமே...
பத்திரிகையாளர்கள் : இல்ல... மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்குற இடங்கள்லாம் எது..?
நட்டா: அவங்க ஓட்டையெல்லாம் கணக்குல எடுத்துக்குறது கிடையாது... ஓட்டுப்போடுறது அவங்க இஷ்டம்... ஆட்சி அமைக்குறது எங்க இஷ்டம்... 
பத்திரிகையாளர்கள்: 50 பேர் கொண்ட உ.பி. வேட்பாளர் பட்டியலை இன்னிக்கு வெளியிடப் போறீங்களா...
நட்டா: அப்படித்தான் நெனச்சோம்... ஆனா, எங்க பட்டியல்ல இருக்குற 20 பேரு எங்க கட்சில இருக்காங்களா அல்லது கட்சி தாவிட்டாங்களான்னு தெரியல... விசாரிக்குறோம்..
பத்திரிகையாளர்கள்: அமைச்சர்கள்லாம் கூட கட்சில இருந்து வெளியேறிட்டாங்களே..
நட்டா: அவங்கல்லாம் எப்பவோ போயிட்டாங்க..
பத்திரிகையாளர்கள்: ஆனா, அமைச்சர்களா இருந்தாங்களே...
நட்டா: ஆமா.. ஆமா... எங்களுக்குத் தெரியாமயே அப்புடி இருந்திருக்காங்க.. 
பத்திரிகையாளர்கள் : பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அநீதின்னு விலகுன எல்லாருமே சொல்றாங்களே..
நட்டா: அதுக்கு ஔரங்கசீப்புதான காரணம்...
பத்திரிகையாளர்கள்: முதல்வர் 80க்கும் 20க்கு நடுவுல போட்டினு சொல்றாரே... மத ரீதியா மக்களப் பிளக்குற மாதிரி இருக்கே..
நட்டா: வேற வழி... இல்லேனா எங்களுக்கு எதிரா இருக்குற 80 விழுக்காட எப்புடிப் பிரிக்குறது.. 
பத்திரிகையாளர்கள்: விவசாயிங்க...
நட்டா: அவங்களுக்கு எதிரான சட்டமெல்லாம பாஜகதான நீக்குச்சு...
பத்திரிகையாளர்கள்: அந்த சட்டத்தக் கொண்டு வந்தது...
நட்டா(குறுக்கிட்டு): நாங்களும் புரிய வைக்க என்னவெல்லாமோ முயற்சி பண்ணுனோம்.. முள்வேலி போட்டோம்... காலிஸ்தானினு சொன்னோம்... துப்பாக்கியால சுட்டோம்... அவங்கதான் புரிஞ்சுக்கல..
பத்திரிகையாளர்கள்: அப்போ விவசாயிங்க ஓட்டெல்லாம் உங்களுக்கு விழுமா..
நட்டா: பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசத்துல பயங்கரவாதிங்க அதிகமா நடமாடுறதா உளவுத்துறை தகவல் சொல்லுது..
பத்திரிகையாளர்கள்: கிழக்கு உ.பி.லயும் எதிர்ப்பு அதிகரிச்சுருக்குறதா சொல்றாங்களே...
நட்டா: என்னங்க நீங்க... மேற்கு உ.பி.லருந்து பயங்கரவாதிங்க அங்க போறதுக்கு எவ்வளவு நேரமாகும்... 
பத்திரிகையாளர்கள்: பயங்கரவாதிங்கன்னு எப்புடிச் சொல்றீங்க..
நட்டா: எல்லாரையும் சொல்வோமா என்ன... எங்களுக்கு எதிரா ஓட்டுப்போடுறவங்கள மட்டும்தான் சொல்றோம்..
பத்திரிகையாளர்கள்: எந்த மாநிலங்கள்ல பாஜக ஆட்சி அமைய வாய்ப்பிருக்கு...
நட்டா: ராஜஸ்தான்ல முயற்சி பண்ணிப்பாத்தோம், முடியல... மகாராஷ்டிராவுல அல்வாதான் கிடைச்சுது.. இப்போதைக்கு எங்களால நிதிஷ் குமாரத்தான் கவுத்துவுட முடியும்..
பத்திரிகையாளர்கள்: இப்போ தேர்தல் நடக்குற...
(போன் “ரிங்”குகிறது. எடுத்துப் பேசுகிறார், நட்டா) என்ன.. நம்ம பட்டியல்ல இருக்குற 50 பேர் அங்க இருக்காங்களா..
இந்த செய்தி போதும் என்று நகர்கிறார்கள், பத்திரிகையாளர்கள்.
கற்பனை - கணேஷ்