tamilnadu

img

எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, டிச.11- பாரதியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டயபுரம் மணிமண்டபத்தில் கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாகவி பாரதியாரின் 140வது பிறந்த நாள் சனிக்கிழமையன்று கொண்டா டப்பட்டது. இதனை முன்னிட்டு பாரதி பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரத்தில் உள்ள பாரதியார் மணிமண்ட பத்தில் பாரதியாரின் சிலைக்கு நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி கருணா நிதி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச் ்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்க ண்டேயன் மற்றும் அரசுத்துறை அதிகாரி கள், மக்கள் பிரதிநிதிகள், பாரதி அன்பர் கள், பள்ளி மாணவ மாணவியர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எட்டயபுரம் பாரதி பிறந்த இல்லத்தில் தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராய ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.