tamilnadu

img

பாரதிதாசன் பல்கலை.யின் அநியாய கட்டண உயர்வு

திருச்சி,ஏப்.7- பெரும்பகுதி  ஏழை எளிய கிராமப்புற மாணவர்களே அரசுக் கலை அறிவியல் கல்லூரி களில் கல்வி பயில்கின்றனர். இவர்களின் கல்லூரி கல்விக்கான விண்ணப்ப செய லாக்க கட்டணம், இளங்கலை  மற்றும்   முதுகலை தேர்வு கட்டணம்,  மதிப்பெண்  அறிக்கைகள்,  இளங்கலை முதுகலை பட்டப்படிப்பு சான்றி தழ்கள், இளங்கலை முதுகலை மறுமதிப்பீடு கட்டணங்கள்  உள்ளிட்ட 16 கட்டண பிரிவு இனங்களில் (மொத்தம் 27) அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்  கட்டண உயர்வை 28.3.2022 அன்று அறிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு  இணைக்கப்பட்டுள்ள  கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  மத்தியில்  இது  பெரும் அதிர்ச்சி யை உருவாக்கியுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் மத்தியிலும்  கவலையையும் விரக்தியை யும்  உருவாக்கியுள்ளது.

இருபது, முப்பது ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த கட்டணத்தை  உயர்த்தி உள்ளோம் என்றால் கூட அதில் ஓரளவு  நியாயம் இருக்கிறது என்று கூறலாம். ஆனால்   2018-2019 கல்வி ஆண்டிலிருந்து  அமலில் இருந்து வந்த அரசு கல்லூரி  கட்டண அமைப்பை தான் ஒட்டு மொத்தமாகவும்  தனி மாணவர் ஒருவரின்   கட்டண சுமையையும்   107 சதவீதம்  அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும்  கொரோனா பாதிப்பிலிருந்து  இப்போதுதான் மீண்டுவரும் கிராமப்புற ஏழை-எளிய குடும்ப பிள்ளைகளின் கல்லூரிக் கல்வி கட்டணத்தை ஒரேடியாக உயர்த்தியிருப்பதை நியாயப்படுத்த முடி யாதது.  மதிப்பெண் பட்டியல் கட்டணம்  ரூ.200- லிருந்து  ரூ.1000-மாகவும் தாமதக்கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் டிகிரி  சான்றிதழ் பெறும் கட்டணம்  ரூ.800லிருந்து ரூ.2000 ஆகவும் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.  தான் படித்த கல்லூரி பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை  அட்ட ஸ்டேஷன் செய்து தருவதற்கும் தர்க்க நியாயம் இன்றி  ரூ.300 ஒவ்வொரு நகலுக்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நல்ல ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு  நிம்மதி  பெருமூச்சோடு  தமிழ்நாடு முன்னேறி வரும் இந்த வேளையில் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து இப்படி ஒரு கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்களுக்கும்  இது  தொடருமா என்பதும்  கவலை தருவ தாக உள்ளது என்று மன்னார்குடியில் முதுகலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் கூறி னார்.   இக்கட்டண  உயர்வு திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலிருந்து கீழே

14.2.2022 தேதியிட்ட  பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு தீர்மானங்கள்  எண் 7, 10  மற்றும் 17இன் கீழ் பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ள  கல்லூரிகளில் நடைபெற்று வரும் பாட வகுப்புகளுக்கான நிரந்தர இணைவு கட்ட ணம் மற்றும் தற்காலிக இணைவு  நீட்டிப்பு கட்டணங்கள் மற்றும்  இதர கட்டணங்களை உயர்த்தி  1.3.2022 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்து  கல்லூரி பாடத்திட்ட வளர்ச்சி குழு  ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் தொடர் கல்வி  மைய இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டி ருந்தது.  இதனைத் தொடர்ந்து தான்   மாணவர் களுக்கான  கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது பல கேள்வி களை  எழுப்பி உள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் இணைவு கட்டண உயர்வு  மாணவர் களுக்கான கட்டண உயர்வு இவைகள் ஏதோ  தமிழ்நாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தின் தனிப்பட்ட  நிர்வாக மற்றும்  கொள்கை முடிவல்ல என்பதையும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வியின் மீது ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளால்  நடத்தப்பட்டு வரும்   தாக்குதல்களின் கல்லெறி  நீரலை  பரவல் விளைவுதான்  என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1956 இல்  மானியக் குழு சட்டத்தின்  மூலம் உருவாக்கப் பட்ட  பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்பாடுகளில் பல்வேறு விமர்சனங்கள்  இருந்தாலும்  சாதாரண  ஏழை எளிய மக்களின் உயர்கல்வியின்  தரத்தை பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்  நடவடிக்கை எடுத்து  வந்துள்ளது. ஒன்றிய அரசுகளின்  உயர்கல்விக் கான நிதி ஒதுக்கீடுகளை பெற்று இந்தி்ய பல் கலைக்கழகங்களுக்கு  பல்வேறு தலைப்பு களில்  நிதி ஒதுக்கீடுகளை செய்து வந்தது. 

பல்கலைக்கழகங்களில் இணைக்கப் பட்டிருந்த  கலை அறிவியல் மற்றும்  பொறி யியல், மருத்துவக் கல்லூரிகளின்  நிர்வாகம் கல்வி  கட்டணங்களை நிர்ணயிக்கும்  அடிப் படை கோட்பாடுகளை உருவாக்கி வந்தது. கனரக தொழில் துறை, மின்னணுவியல்,  விண் வெளி ஆராய்ச்சி,  மருத்துவம், வேளாண்மை போன்ற நாட்டின்  வளர்ச்சிக்கு தேவையான  கல்வியையும் அதன் திட்டங்களையும் எல்லா இந்திய சமூகங்களின் மாணவர்களுக்கும்  சம  வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் அமைப்பாகவும்  செயல்பட்டு வந்தது.  இப்படிப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு வை  சிதைக்கும்   வேலையை  மோடி அரசு  செய்து வருகிறது. இந்திய உயர்கல்வி ஆணை யத்தின் வரைவு (பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 ரத்து) மசோதா, 2018-ஐ  நிறைவேற்றவும் இதன் மூலம்  பல்கலைக்கழக மானியக் குழுவையும்  நாட்டின் தொழில் நுட்ப  கல்வியின் உயர் அமைப்பான அகில இந்திய  தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்  இதர கல்வி அமைப்புகளை   இல்லாமல்செய்துவிட  மோடி அரசு தீர்மானித்துள்ளது.  திரைமறைவில்  உய ரடுக்கு மற்றும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஆதர வாக கல்வியை  மாற்றும்  அதே சமயத்தில்   தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு  உயர்கல்வியை மறுக்கும் முனைப்பான வேலைகளில் பாஜக அரசு  ஈடுபட்டுள்ளது. 

2020-2021 மற்றும் 2021-2022 முந்தைய கல்வியாண்டுகளில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கல்வித்துறை நிலை குலைந்திருந்ததை மறைத்து  2022-2023 ஒன்றிய  பட்ஜெட்டில் 11.86 சதவீதம். கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது.ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவு 2019-20ல் 2.8 சதவீதம், 2020-21ல் 3.1 சதவீதம் (திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி) மற்றும் 2021-22ல் 3.1 சதவீதம்  (பட்ஜெட் மதிப்பீட்டின்படி). ஆகவும் 4 சத வீதத்தை தொடாத நிலையே நீடித்து வரு கிறது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.40828.35 உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதே சமயத்தில் 2021-2022 பட்ஜெட் தொகை ரூ.38350.65  திருத்தப் பட்ட தொகை   ரூ.36031.57 ஆக மாறியது.  இது உண்மையில் எவ்வளவு செலவழிக்கப் பட்டது என்பதை வரும் பட்ஜெட்டில்தான் பார்க்க வேண்டும். இந்த தொகைகளும் மோடி  அரசின் புதிய கல்விக் கொள்கையால் மேட்டுக்குடி உயர்வகுப்பு மாணவர்களுக்கே செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

1965ஆம் அண்டு கோத்தாரி கமிஷனும் பல்வேறு கல்விக் கொள்கைகளும்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவிற்கு  கல்விக்கான  ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தின. ஆனால் பாஜக  அரசின்  கொள்கையானது   கல்வியை   காவிமய மாக்குவது, தனியார் மயமாக்குவது, கார்ப்பரேட்மயமாக்குவது.  இதையே  நாட்டின் ஒரே  கல்வி கொள்கையாக்குவது  என்ற திசையில் செல்வதால்   மாநிலங்களுக்கான  ஒன்றிய அரசின்  கல்வி நிதிஉதவிகள் அதி கரித்து வரும் கல்வித்தேவைகளுக்கேற்ப இன்றி குறைந்து கொண்டே செல்கின்றன.  மறு புறம்  மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்டி தொகை கூட மறுக்கப்படுவது என   மாநிலங்களின் நிதிச்சுமையும் பல்கலைக்கழ கங்களுக்கான சுமையும்  அதிகரித்து  வருகிறது.  இதன் ஒரு முனை விளைவுதான் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு கட்டண உயர்வும்  மாணவர்களுக்கான கல்விக்கட்டண  உயர்வும் ஆகும். எனினும்  இந்த கட்டண உயர்வை  நியாயப்படுத்த முடி யாதது. மாநில அரசு உடனே இதில் தலை யிட்டு பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வை  ரத்து செய்திடவேண்டும். இதையே மாணவ, மாணவிகள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- நீடாசுப்பையா