tamilnadu

img

சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் பெங்களூரு அணி

திரையுலகில் ஒவ்வொரு படத்திற் கும் ஒரு கிளைமேக்ஸ் இருக்கும். அதே போல ஐபிஎல் கிரிக்கெட் தொ டரிலும் ஒரு முக்கிய கிளைமேக்ஸ் உள்ளது. அதுயாதெனில் 5 முறை ஐபிஎல் கோப் பையை வென்ற சென்னை, மும்பை அணி களை போன்று பலமான அடித்தளம் கொண்ட பெங்களூரு அணி, இதுவரை நடைபெற்ற 16 சீசனில், 15 சீசன் மிக பல மான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இன் னும் ஒருமுறை கூட கோப்பையை வெல் லாததது தான் ஐபிஎல் தொடரின் கிளை மேக்ஸ் ஆகும். ஒவ்வொரு சீசனிலும் தங்கள் அணி கோப்பையை கண்டிப்பாக வெல் லும் என 15 சீசனிலும் பெங்களூரு ரசிகர்கள் தவம் மேற்கொள்வது போன்று ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் ஒவ் வொரு சீசனிலும் சொதப்பலான ஆட்டத் தால் பெங்களூரு அணியின் கோப்பை கனவு கானல் நீராகவே இருந்தாலும், பெங்களூரு ரசிகர்களின் உறுதியான ஆத ரவை கண்டு மற்ற ஐபிஎல் அணி ரசிகர் கள் கூட, இம்முறை பெங்களூரு அணி கோப்பையை வெல்லட்டும் என்று கூறும் அளவிற்கு அந்த அணி கிளைமேக்ஸ் கொண்ட அணியாக உள்ளது.  இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் மிக கடுமையான போராட்டத்துக்குப் பின் தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னே றியது. ஆரம்பகாலத்தில் புள்ளிப்பட்டிய லில் கடைசி இடத்தில் இருந்த பெங்க ளூரு அணி வெகுண்டு எழுந்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னறியதை பெங்களூரு ரசி கர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான கருத்து மற்றும் மீம்ஸ்களால் பெங்களூரு அணி சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங் கில் வைரலாகி வருகிறது.

;