tamilnadu

எண்ணூரில் 9 தொழிலாளர் உயிரிழப்புக்கு பெல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம்

எண்ணூரில் 9 தொழிலாளர் உயிரிழப்புக்கு பெல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம்

திருப்பூர், அக். 2 - எண்ணூர் அனல் மின் நிலைய பணியில் 9 தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்ததற்கு பெல் நிறுவனத்தின் அலட்சியமே முழுக்காரணம் என்று தமிழ்நாடு கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சம்மேளனம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. “இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், புலம் பெயர் தொழிலாளர் சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனப் பொதுச்செயலாளர் டி. குமார் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கைவருமாறு: 150 அடி உயரத்திலிருந்து விழுந்த தொழிலாளர்கள் சென்னை அருகே பொன்னேரி வட்டம் வயலூர் ஊராட்சியில் உள்ள எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2x660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், இதன் கட்டுமான பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்து, இயக்குவதற்கு உரிய ஒப்பந்த த்தை பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (பெல்) நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இங்கு மொத்தமாக 3,200 தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட மாநிலத் தொழி லாளர்கள் ஆவர்.  இதில் நிலக்கரி சேமிப்பு செய்யும் பகுதிக்காக வளைவு போன்ற ஒரு கூடாரம் அமைக்கும் பணி மெட்டல் கர்மா என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் 150 அடி உயரத்தில் பணியாற்றும் தொழி லாளர்களின் பாதுகாப்புக்குரிய வலை களை அமைக்காமல், தொழிலாளர் களைப் பணி செய்ய வைத்துள்ளனர். செப். 30 அன்று வளைவுகள் அப்படியே முழுமையாக விழுந்து பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களும் அதனுடன் விழுந்தனர். ஒவ்வொரு குழாயும் 200 கிலோ எடை உள்ளது. குஜராத் நிர்வாகிகளின் லாபவெறிக்கு 9 உயிர்கள் பலி அசாம் மாநிலத் தொழிலாளர் 10 பேர் வேலை செய்த இடத்தில் ஒரு தொழி லாளி மட்டும் பலத்த காயங்களுடன் தப்பினார். சம்பவ இடத்திலேயே 6  தொழிலாளர்களும், அரசு ஸ்டான்லி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 தொழிலாளிகளும் உயிரி ழந்து விட்டனர். பலர் காயமடைந்துள்ள நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவிப்பதுடன், சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர் விரைந்து குணமடைய வேண்டும் என சிஐடியு விழைகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அத்திப்பள்ளியில் அமைந்துள்ள மெட்டல் கர்மா கம்பெனி, சவூதி அரேபிய நாட்டு நிறுவனமாகும். இதன் இயக்கு நர்கள் அனைவரும் குஜராத் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனுபவமற்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்ட் நிலக்கரி சேமிப்பு செய்ய இது போன்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள எந்த அனல் மின் நிலையத்திலும் இல்லை. இது தேவையற்ற ஒன்றாகும். இது அனுபவமற்ற நிறுவனத்தின் பணி யாக உள்ளது. இந்த விபத்து முழுக்க, முழுக்க ‘பெல்’ நிறுவனத்தின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்டதாகும். வெறும் பார்வையாளராக எவ்வித கண்காணிப் பும் இல்லாத தமிழ்நாடு மின்சார வாரி யமும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அங்கு பணியாற்றும் இதர தொழி லாளர்களின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வேண்டியது அவசியம். கட்டுமானங்களை பதிவு செய்யும் கிண்டியில் அமைந்துள்ள பி.ஓ.சி.டபிள்யூ., நிறுவனம் பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசும், ஒன்றிய அரசும் நிவாரணம் அறிவித்துள்ளன. இது போன்ற ஆபத்து நிறைந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வேண்டும். இறந்த வர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கூடுதலாக வழங்கப்படுவதுடன், குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். அகில இந்திய புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979-ஐ அனைத்து மாநிலங்களிலும் கறாராக அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.