tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கேலிவதை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சாவூர்,  ஆக.13 -  தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கேலிவதை மற்றும் போதை ஒழிப்பு  விழிப்புணர்வு கருத்த ரங்கம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.   கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சி.ராணி (பொ) தலைமை வகித்தார். வணிக நிர்வா கவியல் துறை உதவிப்  பேராசிரியர் ப.ஜெயக் குமார் முன்னிலை வகித் தார். ஓய்வு பெற்ற லஞ்ச  ஒழிப்புத் துறை காவல்  துணைக் கண்காணிப்பா ளரும், எழுத்தாளருமான க.மாணிக்கவாசகம், கேலிவதை மற்றும் போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு என்ற தலைப்பில்  பேசினார். வணிகவி யல் துறை உதவிப் பேரா சிரியர் கு.முத்துகிருஷ் ணன் கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.  

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம்,  ஆக.13 - தஞ்சாவூர் விற்ப னைக் குழுவின்கீழ் இயங்கி வரும், தஞ்சா வூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கபிஸ் தலம் அருகே கீழகொட் டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்  நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கும்பகோணம், இதன் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த 418 விவ சாயிகள், 87.25 மெ.டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகா ராஷ்டிரா, ஆந்திரா மாநில வணிகர்கள், கும்ப கோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் பருத்தி மறைமுக ஏலத் தில் கலந்துக் கொண்டு  பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,769, குறைந்தபட்சம் ரூ.7,229, சராசரி ரூ.7,528 என விலை நிர்ண யித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ.63.69 லட்சம்.

புதிய தார்ச்சாலை அமைக்கக் கோரி சிபிஎம் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஆக.13 - கல்லப்பட்டியில் புதிய தார்ச்சாலை அமைத்துத் தர வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கல்லுப்பட்டி விலக்கு முதல் நத்தமாடிப்பட்டி  முருகன் கோவில் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து  குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், பொது மக்கள் மேற்படி சாலையை பயன்படுத்த முடியாமல் மிகவும்  சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மேற்படி சாலையை சமப்படுத்தி புதிய  தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லுப்பட்டி மடம்  அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சித்திரவேல் தலைமை வகித்தார். போராட் டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமை யன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழ கன், ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.மணி, க.வெள்ளைச்சாமி உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்ப தாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

கும்பகோணம் மகா மக திருவிழா-2028: முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

கும்பகோணம், ஆக.13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் யா.பிரியங்கா பங்கஜம், தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், “கும்பகோணம் மாநகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவையொட்டி, சைவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் தேரோட்டங்கள், ஓலைச்சப்பரம், சுவாமி வீதியுலா, தெப்பம் மற்றும் மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்த வாரி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மகாமக திருவிழா சிறப்புற நடைபெற வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை, இந்துசமய அறநிலையத்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொதுப் பணித்துறை, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்து, விழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், துணை மேயர் சுப.தமிழழகன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் காமகோடி, சென்னை ஐஐடி பேராசிரியர் பார்கவா, மரு.காமகோடி வட்டாட்சியர் சண்முகம் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.13 - ஓய்வுபெறும் நாளி லேயே அனைத்துப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  புதுக்கோட்டை அரசுப்  போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு, அந்த அமைப்பின் மண்டலத் தலைவர் ஜி.ஜெய ராமன் தலைமை வகித்தார்.  மண்டலப் பொதுச் செயலர் சா.இளங்கோவன், பொருளாளர் எம்.பால சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.